எண்ணமும் எழுத்தும் பேச்சும் படிப்பும் தமிழே! – இலக்குவனார் திருவள்ளுவன்

எண்ணமும் எழுத்தும் பேச்சும் படிப்பும் தமிழே! அனைவருக்கும் பிடித்த பாடல், (1857 இல் எழுதப்பெற்ற) “Jingle Bells” என்பதாகும். இந்த மெட்டிலான பின்வரும் பாடலைப் பிள்ளைகளுக்குச் சொல்லித்; தாருங்கள்; தமிழ்ப் பாலையும் கலந்து ஊட்டுவதாக அமையும்.   எண்ணுக எண்ணுக தமிழில் என்றுமே!                         எழுதுக எழுதுக தமிழில் எதையுமே!                         பேசுக பேசுக நல்ல தமிழிலே!                         பயிலுக பயிலுக நமது தமிழிலே!                         மொழியை மறந்தாலோ                               வாழ்வை இழப்போமே!                         வாழ்வை இழந்தாலோ                         நாமும் இல்லையே!                         நம்…

தமிழை வாழ்த்துவோம்! –  இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழை வாழ்த்துவோம்! “Yellow Ribbons” என்னும் பாடல் மெட்டில் பின்வரும் பாடலைச் சொல்லித் தாருங்கள். கடமைகளை அறிவதுடன் கன்னித்தமிழ் மீதான பற்றினையும் பெறுவார்கள்.      காலை எழுந்ததும் பாடம் படிப்போம்                         மாலை முழுவதும் ஆடிக் களிப்போம்                                                                         விளையாடிக் களிப்போம்                         பாரதி அன்று சொன்னதைக் கேட்டு நடப்போம்!                         பாடிஆடி மகிழ்ந்து நாம் கலையை வளர்ப்போம்-தமிழ்க்                                                                         கலையை வளர்ப்போம்!                         கூடுவோம் ஒன்றாய்க் கூடுவோம்!                         பாரதி அன்று சொன்னபடிக் கூடி ஆடுவோம்! – ஒன்றாய்க்                                                                              கூடி…

கைகள் இரண்டு ஊருக்குதவ  – இலக்குவனார் திருவள்ளுவன்

கைகள் இரண்டு ஊருக்குதவ குழந்தைகளுக்குக் கண், காது முதலிய புலனுறுப்புகளைச் சொல்லித் தர உதவும் பாடல். “Ten little fingers” என்னும் பாடல் முறையில் அமைந்தது. பாடிப் பாருங்கள். குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். கைகள் இரண்டு ஊருக்குதவ                         கால்கள் இரண்டு நல்வழி நடக்க                         கண்கள் இரண்டு கனிவாய்க் காண                         செவிகள் இரண்டு கருத்தாய்க் கேட்க                         நிறைவாய்க் கேட்டுக் குறைவாய்ப் பேச                         வாயோ நமக்கு ஒன்றே ஒன்று!                         வாயோ நமக்கு ஒன்றே ஒன்று! குழந்தைகளுக்கு நாம் கடமைகளைச்…

மழை வீழட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

மழை வீழட்டும்! 1744 இல் எழுதப்பெற்ற “London Bridge Is Falling Down” என்றொரு மழலைப் பாடலை அனைவரும் அறிவர். “வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும்” என்னும் கலைஞரின் கருத்தை இப்பாடல் முறையில் பொருத்திப் பாருங்கள். பின்வரும் இனிய பாடல் கிடைக்கும். வேண்டிய மட்டும் வீழட்டும்! – மழை வீழட்டும் வீழட்டும் – பாரில் வேண்டிய மட்டும் வீழட்டும்!              மழை                                                 எங்கெங்கும் வீழட்டும்!                         நீயும் நானும் வீழ்ந்தாலும் – தமிழ்                         வாழட்டும்! வாழட்டும்! – பாரில்                         நீயும்…

தூய்மையே செல்வம்  – இலக்குவனார் திருவள்ளுவன்

தூய்மையே செல்வம்   மழலைப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் சில பாடல்களின் மெட்டுகளில் சில பாடல்களைப் பார்ப்போம். பொதுவாக ஆங்கில மழலைப் பாடல்கள் பல ஒலிக் குறிப்புகளை அறியவே கற்பிக்கப்படுகின்றன. சில மட்டுமே பொருள் உள்ள பாடல்களாக உள்ளன. ஆனால் தமிழிலுள்ள குழந்தைப் பாடல்கள் யாவும் அறிவுரையாகவோ அறவுரையாகவோ அறிவியலுரையாகவோ அமைந்துள்ளன. இருப்பினும் தெரிந்த மெட்டின் அடிப்படையில் பாடல்களை அறிவது குழந்தைகளை ஈர்க்கும் என்பதால் பின்வரும் பாடல்கள் குறிக்கப் படுகின்றன.       வாழ்க்கைக்கு அடிப்படை தூய்மை. மனத்தூய்மை வாய்மையால் அமையும் என்பார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். சுற்றுப்புறத்…

புகை இல்லாத புகைவண்டி – சின்னா சர்புதீன்

புகை இல்லாத புகைவண்டி ச்சுக்குச்சுக்கு ச்சுக்குச்சுக்கு ச்சுக்குச்சுக்கு ச்சூ ச்சுக்குச்சுக்கு ச்சுக்குச்சுக்கு ச்சுக்குச்சுக்கு ச்சூ இரும்புக்கம்பி இரண்டிலமர்ந்து   எதிர்த்திசையை நோக்கியே விரைந்துசெல்லும் வண்டியைப்பார்   வீறுகொண்டு பறக்குதே நீண்டுநெடுங் தூரம்ஓடி   நிற்குமிடம் தன்னிலே மீண்டும்மக்கள் தம்மைஏற்றி   மிகவிரைவாய்ச் செல்லுமே புகையிரதம் எனஇதற்குப்   பெயரிட்டார்கள் முன்னராம் புகைவராத இன்றும் அது   புகையிரதம் தானடா ஆடுமாடு மனிதர் பொருள்   அத்தனையும் சுமக்குமாம் வீடுபோன்ற அறைகள்பல   வரிசையாக இருக்குமாம் காடுமேடு வயல்நிலங்கள்   கடல்கடந்தும் போகுமாம் நாடிரண்டை மூன்றைத்தொடுத்து…