(வெருளி நோய்கள் 406-410 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 411-415 411. உணர்ச்சி வெருளி – Animotophobia உணர்ச்சி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உணர்ச்சி வெருளி.மகிழ்ச்சி சார்ந்த அல்லது துயர உணர்வுகள் எதுவாயினும் அதற்கு ஆட்பட்டுப் பேரச்சம் கொள்வர்.உணர்ச்சிவய வெருளி(Emotaophobia) உள்ளவர்களுக்கு உணர்ச்சி வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.00 உணர்ச்சிவயம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உணர்ச்சிவய வெருளி.உணர்ச்சி வெருளி(Animotophobia) உள்ளவர்களுக்கு உணர்ச்சிவய வெருளி வரும் வாய்ப்பு உள்ளது. 00 உணவு விடுதிபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் உணவு விடுதி வெருளி.உணவகங்களில் தரப்படும் உணவு நலஆதாரமற்று(சுகாதாரமற்று) இருக்கும்,…