தாய்மொழி நாளுக்கு வாழ்த்திய முதல்வருக்குப் பாராட்டுகள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
தாய்மொழி நாளுக்கு வாழ்த்திய முதல்வருக்குப் பாராட்டுகள்! உலகத்தாய்மொழி நாளை முன்னிட்டுத் தமிழக முதல்வர் எடப்பாடி க.பழனிசாமி இம்முறை வாழ்த்துச் செய்தி அளித்துள்ளார். உண்மையிலேயே இது வரவேற்க வேண்டிய ஒன்றாகும். இம்முறை ஊடகங்களிலும் உலகத் தாய்மொழி நாள் குறித்த கட்டுரைகள், பேச்சுகள் தமிழின் சிறப்பை உணர்த்தும் வகையில் இடம் பெற்றுள்ளன. பல்கலைக்கழகங்கள், அரசு நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், தமிழ் அமைப்புகள் சார்பில் உலகத்தாய்மொழி நாள் கொண்டாடப்பட்டுள்ளது. இஃது ஒரு வளர்நிலையாகும். எனவே அதற்கு முதல்வரும் வாழ்த்துச் செய்தி அளித்துள்ளது தாய்மொழி நாள் மகிழ்ச்சிக்கு மகுடம் சூட்டுவதாக…
உலகத்தாய்மொழி நாளில் தமிழைக் கொண்டாடுவோம்! – பெ. சிவசுப்பிரமணியன்
உலகத்தாய்மொழி நாளில் தமிழைக் கொண்டாடுவோம்! உலகெங்கும் அவரவர் தாய்மொழியே ஆட்சியிலும் கல்வியிலும் கோலோச்சுகின்றன. ஐரோப்பாக் கண்டத்தில் உள்ள 49 நாடுகளிலும்கூட அந்நாடுகளின் தாய்மொழிகளே கோலோச்சுகின்றன; நம் மனத்தில் உருவகப்படுத்தப்பட்டதுபோல ஆங்கிலம் அல்ல. ஆங்கிலம் உலகம் முழுவதுமே காணப்படுகின்றது என்பதில் உண்மை இல்லை! இங்கிலாந்திலும்கூட 7 மொழிகள் கோலோச்சுகின்றன. அங்குள்ள மாநிலங்களின் தாய்மொழிகள் – காட்டிசு(இசுகாத்துமொழி), ஐரீசு, வேலிசு, கார்னிசு, மாணக்சு, பிரெஞ்சு மொழிகளே ஆட்சி மொழியாக, கல்வி மொழியாகக் கோலோச்சுகின்றன. ஆங்கிலம் மத்திய அரசின் ஆட்சிமொழி நம் நாட்டில் இந்தி போல! (படிக்க…
தாய்மொழிநாள் உரை – தமிழ் சூசை
இனிய நண்பர்களே! மாசி 09, 2047 – 21 02 2016 பிற்பகல் 3.00 மணிக்குத் திருச்சிராப்பள்ளி தூய பவுல்இறையியல் கல்லூரியில் பாவாணர் தமிழியக்கக் கூட்டம் தலைப்பு : “தாய்மொழிநாள்” பன்னாட்டு மன்றம் (U.N.O) அறிவித்தநாள். வங்காளர்கள் பங்களாதேசத்தில்தாய்மொழிக்காக உயிர் நீத்தநாள். தாய்மொழி உணர்வு தாய்மொழிவழிக்கல்வி உலகத்தாய்மொழிக்காப்பு போர்கள். இந்தி எதிர்ப்புப்போர்பற்றிய என்(இ.சூசை) உரை . நண்பர்கள், மாணவர்கள் வருக! வருக! இ.சூசை
உலகத்தாய்மொழி நாள்
மாசி 10, 2046 / பிப்.22,2015 பேராவூருணி
வழக்கறிஞர் போராட்டத்திற்கு வாழ்த்துகள் – நாணல் நண்பர்கள் இயக்கம்
மாசி 8, 2046 / பிப்.20,2015
