நாலடி நல்கும் நன்னெறி 20: – பிறன் மனைவியை விரும்பாதே: இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி 19: – பிறருக்குக் கொடுப்பதைக் கடமையாகக் கொள்க: தொடர்ச்சி) பிறன் மனைவியை விரும்பினால் வருவது அச்சம்! அச்சம்! அச்சமே! எனவே, கை விடுக! புக்க விடத்தச்சம் போதரும் போதச்சம் துய்க்கு மிடத்தச்சம் தோன்றாமல் காப்பச்சம் எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ உட்கான் பிறன்இல் புகல். (நாலடியார், ௮௰௩-83) பொருளுரை: பிறர் மனைவியை விரும்பி அவள் வீட்டிற்குள் புகும் பொழுது அச்சம்; அங்கிருந்து திரும்பி வெளியே வரும்பொழுதும்  அச்சம்; அவளுடன் சேர்ந்து இன்பம் துய்க்கும்போதும் அச்சம்; இக்கள்ள உறவைப் பிறர் யாரும்…

நாலடி நல்கும் நன்னெறி 13:  நிலைபுகழ் பெற நல்வினைகள் புரிவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி 12: நன்றியில் செல்வத்தை விரும்பாதீர்! –  தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 13:  நிலைபுகழ் பெற நல்வினைகள் புரிவோம்! நார்த்தொடுத் தீர்க்கிலென் நன்றாய்ந் தடக்கிலென் பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென் தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும் கூத்தன் புறப்பட்டக் கால்.             (நாலடியார், அறத்துப்பால், 3. யாக்கை நிலையாமை, பாடல் எண் 26) பாடலின் பிரித்து எழுதிய வடிவம் : நார்த் தொடுத்து ஈர்க்கில் என்? நன்று ஆய்ந்து அடக்கில் என்? பார்த்துழிப் பெய்யில் என்? பல்லோர் பழிக்கில் என்?…

நாலடி நல்கும் நன்னெறி : நிலையாமை உணர்ந்து நல்லறம் புரிக!-இலக்குவனார் திருவள்ளுவன்

நிலையாமை உணர்ந்து நல்லறம் புரிக! நாலடியார் துறவறவியலில் தொடங்கி முதலில் செல்வ நிலையாமை, இளமை நிலையாமை குறித்துக் கூறுகிறது. மூன்றாவதாக யாக்கை நிலையாமையை உரைக்கிறது. யாக்கை என்பது உடலைக் குறிக்கிறது. யாத்தல் என்றால் கட்டல் என்று பொருள். இதிலிருந்து யாக்கை வந்தது.  எலும்பு, தசை, தசை நார், இழைகள், உள்ளுறுப்புகள் முதலியவற்றைக் கொண்டு கட்டமைக்கப்பட்டதால் யாக்கை எனப் பெயர் பெற்றது.  மூன்று அதிகாரத் தலைப்பு கூறும் நிலையாமை குறித்து மணிமேகலை முன்னரே இளமையும் நில்லா; யாக்கையும் நில்லா; வளவிய வான்பெரும் செல்வமும் நில்லா; (சிறைசெய்…

17ஆவது சைவ மாநாடு, இலண்டன்

 சித்திரை 17 , 2047  / ஏப்பிரல் 30   2016 காலை 9.00 முதல் இரவு 8.00 வரை இலாக்சுபோர்டு பள்ளி அறக்கட்டளை   சிறப்பு விருந்தினர்:                சிவஞான பாலையா சுவாமிகள்    சித்திரை 18, 2047  / ஏப்பிரல்  மே 1, 2016 காலை 9.00 முதல் இரவு 8.00 வரை உயர்வாசல் குன்று முருகன் ஆலயம்