சங்கப் புலவர்கள் பொன்னுரை – 19 : மக்களின் பொருள் அழியும்படி வரிப்பொருள் பெறாதே!-இலக்குவனார் திருவள்ளுவன்

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 19 மக்களின் பொருள் அழியும்படி வரிப்பொருள் பெறாதே! மரம் சா மருந்தும் கொள்ளார், மாந்தர்;உரம் சாச் செய்யார், உயர்தவம்; வளம் கெடப்பொன்னும் கொள்ளார் புலவர் கணி புன்குன்றனார், நற்றிணை 226.1-3 சிலர் புலவர் பெயரை “யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனப் பாடிய கணியன் பூங்குன்றனார் எனக் குறிப்பிடுகின்றனர். சொற்பொருள்: மரம் சா – மரம் சாகும்படி; உரம் சா – வலிமை குன்றும்படி: பொன்னுங் கொள்ளார் மன்னர் – ஆள்வோர் இறைப்பொருள் வாங்க மாட்டார். இலை, பூ, காய்,…

புலம் பெயர் பறவைகள் – அன்றே சொன்னார்கள் –         இலக்குவனார் திருவள்ளுவன்

(பாசன அறிவியல் – அன்றே சொன்னார்கள்:தொடர்ச்சி) புலம் பெயர் பறவைகள்  பறவைகள் சில பருவங்களில் இடம் விட்டு இடம் மாறிச் செல்வதை – தம் புலத்தில் இருந்து பெயர்ந்து வேறு புலத்திற்குச் செல்வதைப் புலம் பெயர்தல் (migration) என்கின்றனர். இதற்கான தமிழ்க்கலைச் சொல் வலசை என்பதாகும். எசியாடு(Hesiod), ஓமர்(Homer), எரொடொதசு(Herodotus), அரிசுட்டாடில்(Aristotle) முதலான கிரேக்க அறிஞர்கள் பறவைகள் இடம் விட்டு இடம் மாறுவதைக் குறிப்பிட்டுள்ளார்கள். எனினும் பறவைகள் பிற பகுதிகளில் இருந்து வருவதையும் பிற பகுதிகளுக்குச் செல்வதையும் எங்கும் செல்லாமல் ஒரே பகுதியிலேயே தங்கி…