கக. வழக்கில் வழுக்கள் – திருத்துறைக்கிழார்
( க0. 1938 – ஆம் ஆண்டு தொட்டு இன்றுவரை நீடித்துவரும்‘இந்தி’ எதிர்ப்பினால் தமிழர்களுக்கு ஏற்பட்ட நன்மை, தீமைகள் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் கக. வழக்கில் வழுக்கள் எழுவாய் தமிழ் மொழி தோன்றிய காலவரையறை இன்னும் தமிழறிஞர்களால் கணிக்கவியலாத புதிராயுளது. உலக மொழிகள் யாவற்றினும் முதல் தாய்மொழியும் தமிழே என மொழி ஆராய்வாளர் மொழிகின்றனர். அத்தகு மொழி, மூவேந்தர்களாகிய சேர – சோழ – பாண்டியர்களால் சீராட்டிப் பாராட்டி வளர்க்கப்பெற்றது. பாண்டியப் பேரரசு, முத்தமிழ்க் கழகங்கள் மூன்று கண்டு – தமிழைப் பேணிற்று. அவர்கள்…
௯. வரலாற்றையே மாற்றும் வந்தேறிகள் – திருத்துறைக்கிழார்
(அ. பழமையும் புதுமையும் – திருத்துறைக் கிழார் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் ௯. வரலாற்றையே மாற்றும் வந்தேறிகள் வரலாற்று அறிஞர்கள், ஆரியர் மத்திய ஆசியாவிலிருந்து ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு கைபர் கணவாய், போலன் கணவாய் வழியாக இந்தியாவிலுள்ள செழிப்பான சிந்துசமவெளியில் புகுந்தார்கள் என வரலாறு எழுதியுள்ளனர். இன்றுள்ள ஆரியக் குஞ்சுகள், ஆரியர்கள் ஆடுமாடுகளை ஓட்டிக் கொண்டு வந்ததை எவன் கூரை மீதிருந்து பார்த்தான் என்றும், பிரித்தாளும் சூழ்ச்சி தெரிந்த ஆங்கிலேயர் ஆரியர், திராவிடர் என்று பிரித்து வரலாறு எழுதிவிட்டனர்…
க0. தமிழ்நாட்டில் தமிழ் நிலைக்குமா?-வி.பொ.பழனிவேலனார்
(௯. பிற மொழிக் கலப்பால் தமிழ் வளருமா?-வி.பொ.பழனிவேலனார்-தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் ௰. தமிழ்நாட்டில் தமிழ் நிலைக்குமா? க. தமிழ் மொழியுடன் வேற்றுமொழிச் சொற்கள் பெருமளவு கலக்கப்பட்டு பல்லாயிரம் தமிழ்ச்சொற்கள் வழக்கொழிந்துவிட்டன. உ. தமிழ்மக்கள் பேச்சிலும், எழுத்திலும் தமிழ்ச்சொற்களைக் காண்பது அரிதாகிவிட்டது.௩. தமிழ்நாட்டில் வாழும் தமிழ்மக்களின் பெயர்கள் தமிழாக இல்லை.௪. தமிழ்நாட்டில் உள்ள கடைகள், தொழிலகங்களின் பெயர்கள் தமிழ்மொழியில் எழுதப்படவில்லை.ரு. தமிழ்நாட்டில் உள்ள ஊர்களின் பெயர்கள் பல தமிழல்ல. தமிழில் எழுதியுள்ள பெயர்களும் பிழைபட எழுதப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுத் தெருக்களில் தமிழ் வழங்கவில்லை.எ. தமிழில் இப்பொழுது இந்திச் சொற்கள்…
௯. பிற மொழிக் கலப்பால் தமிழ் வளருமா?-வி.பொ.பழனிவேலனார்
(அ. தமிழும் – தமிழரும் -புலவர் வி.பொ.பழனிவேலனார்-தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் ௯. பிற மொழிக் கலப்பால் தமிழ் வளருமா? பிறமொழிக் கலப்பால் பிற மொழிகள் வளரலாம். ஆனால், தமிழ் அதற்குப் புறம்பானது. தமிழ் “உயர்தனிச் செம்மொழி” என்பதைப் பலர் அறியாமையால், பிறமொழிச் சொற்கள் தமிழில் கலந்தால் தமிழ் வளம் பெறும் என்கின்றனர். இத்தகையோர் மொழி நூலறிவு அற்றவராவர். சமற்கிருதத்திலிருந்து தமிழ் பிறந்ததென்றும், அதனால் தமிழ்வளம் பெற்றதென்றும் பிதற்றும் பேதையர் பலராவர். இவர்தம் கூற்று முற்றும் பொய்யே! வடமொழிச் (சமற்கிருதம்) சொற்கள் தமிழில் கலந்தமையால் ஆயிரக்கணக்கான தமிழ்ச்சொற்கள்…
அ. தமிழும் – தமிழரும் -புலவர் வி.பொ.பழனிவேலனார்
(எ. தமிழும் – வடமொழியும்-புலவர் வி.பொ.பழனிவேலனார் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் அ. தமிழும் – தமிழரும் தமிழ்நாட்டில் இன்று ஆரியர், ஆந்திரர், கன்னடர், துளுவர், கேரளர், துருக்கியர், ஆங்கிலோ-இந்தியர் முதலிய பலர் வாழ்கின்றனர். ஆயினும், பல்லாண்டுகளாக இங்கு வாழ்ந்து வருவதனால் இவர்கள் தம் தாய்மொழி “தமிழ்” என்றே மக்கள் தொகைக் கணக்கெடுக்கும் போதும், படிக்கவும், வேலைக்கு விண்ணப்பங்கள் கொடுக்கும் போதும் பதிவு செய்கின்றனர். அவர்கள் இல்லங்களில் ஒருவர்க்கொருவர் உரையாடும் போதும், உறவினர்களுடன் பேசும்போதும், அவரவர் உண்மையான தாய்மொழிகளாகிய சமற்கிருதம், தெலுங்கு, கன்னடம், துளுவம், மலையாளம்,…
எ. தமிழும் – வடமொழியும்-புலவர் வி.பொ.பழனிவேலனார்
(௬. கலைச்சொற்களின் தேவை-புலவர் வி.பொ.பழனிவேலனார்-தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் எ. தமிழும் – வடமொழியும் தமிழும் வடமொழியும் (சமற்கிருதம்) இறைவனது இரு கண்கள் என்பர் சிவனடியார்; வடமொழியினின்றுதான் தமிழ் தோன்றிற்றென்பர் வடமொழிவாணர். தமிழில் வடமொழிச் சொற்கள் கலந்ததால்தாம் தமிழ் வளம் பெற்றதென்பர் தமிழ்ப்பகைவர். சிவன் ஆரிய அகத்தியனுக்குத் தமிழ் இலக்கணத்தைக் கற்பித்து, தென்னாட்டில் தமிழைப் பரப்பச் செய்தான் என்பது ஆரியர் கூற்று. மேற்கூறியவை மொழி நூலாராய்ச்சியும், தமிழின் இயல்பறிவும் இல்லாதார் கழற்றுரைகளாகும். தமிழ், திரவிடத்திற்குத் தாயும், ஆரியத்திற்கு மூலமுமாகும் என்பது மொழிநூல் மூதறிஞர் ஞா….
௬. கலைச்சொற்களின் தேவை-புலவர் வி.பொ.பழனிவேலனார்
(ரு. தமிழ் வளர்ச்சிக்கு அரசு செய்யவேண்டியன-புலவர் வி.பொ.பழனிவேலனார்-தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் ௬. கலைச்சொற்களின் தேவை வேற்றுமொழிச் சொற்கள் பல தமிழில் வந்து கலந்து தமிழைக் களங்கப்படுத்துகின்றன. ஏன்? தமிழை அழிக்கின்றன என்றாலும் மிகையன்று. சில தமிழ் எழுத்தாளர் தமிழில் கலைச்சொற்கள் இல்லையென்று கூறி வேற்றுமொழிச் சொற்களைத் தம் படைப்புகளில் அப்படியே எடுத்தாள்கின்றனர். சில புதுமை எழுத்தாளர் மக்களுக்குப் புரியும்படி மக்கள் மொழியில் எழுதவேண்டுமென்று சொல்லி கொச்சைத் தமிழில் எழுதுகின்றனர். இத்தகையோரெல்லாம் தமிழை அழிப்பவர் என்பது எம் கருத்து. மணிப்பவளநடை, பேச்சுத்தமிழ்நடை, கொச்சைநடை ஆகியன…
௪. திருத்தமாய்ப் பேசுங்கள்!-புலவர் வி.பொ.பழனிவேலனார்
(௩. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்?-புலவர் வி.பொ.பழனிவேலனார் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் ௪. திருத்தமாய்ப் பேசுங்கள்! தமிழ்மொழி தோன்றிய காலம், மொழியறிஞர்களாலும் கணிக்கவியலாத புதிராயுள்ளது. அஃது, உலக மொழிகட்கு முன்னோடியும், முதல் தாய்மொழியுமாகும். இத்தகு தமிழ்மொழி சேர, சோழ, பாண்டிய அரசர்களால் சீராட்டி, பாராட்டி வளர்க்கப் பெற்றதாகும். பாண்டியப் பேரரசு முத்தமிழ்க் கழகங்கள் மூன்று நிறுவிப் பேணியது. மூவேந்தர் காலத்திற்குப் பின்னர் தமிழ் பல இடர்ப்பாடுகட்கு உள்ளாகியது. தமிழ்நாடும் பலரது படையெடுப்புக்கு ஆளாகியது. தமிழ்நாட்டை வென்று ஆண்ட அரசர்கள் தம் மொழி, சமயம், நாகரிகம்,…