சங்கப் புலவர்கள் பொன்னுரை – 15 : மக்களுக்குத் தேவை நல்லாட்சி!- இலக்குவனார் திருவள்ளுவன்
(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 14 – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 15 மக்களுக்குத் தேவை நல்லாட்சி! “அரசுமுறை செய்க களவில் லாகுக” – ஐங்குறுநூறு, பாடல் 8, அடி 2 புலவர்: ஓரம்போகியார்திணை: மருதம்சொற் பிரிப்பு : களவு இல்லாகுக நாட்டில் அரசு முறையாக இயங்க வேண்டும். வஞ்சகம் இல்லாதிருத்தல் வேண்டும் என்கிறார் புலவர் ஓரம்போகியார். அரசு முறையாக இயங்காவிடில் நாட்டில் பல தீவினைகள் நிகழும். மக்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் தீங்குகள் நேரும். இவையெல்லாம்…
