கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 6, அன்றே சொன்னார்கள்44, இலக்குவனார் திருவள்ளுவன்
(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -3:தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 6 நகரங்கள் போல் பெரிதாக அமைந்த மாளிகைகளை நகர் என்றே பழந்தமிழர் குறிப்பிட்டள்ளதைக் கண்டோம். புலவர்கள், நகரங்களைப்பற்றிக் குறிப்பிடும் பொழுதே நகரங்களில் உள்ள கட்டடங்களின் சிறப்புகளை வெளிப்படுத்தி உள்ளனர். மாளிகைகள் பற்றிக் குறிப்பிடும் பொழுதே அவற்றின் உயரம், அகலம், காவல், வளமை முதலான சிறப்புகளை உணர்த்த அவர்கள் தவறவில்லை.உயர்ந்த மேல்நிலைகளை உடைய பெரிய மனை நெடுநிலை வியல் நகர் எனச் சொல்லப்பட்டுள்ளது. புலவர் மதுரைச் சுள்ளம்போதனார்,வியல் நகர் (நற்றிணை: 215.4) என அகன்ற மாளிகையைக்குறிப்பிடுகிறார். …
வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 2/3- அன்றே சொன்னார்கள் 39 : – இலக்குவனார் திருவள்ளுவன்
(வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 1/3 – தொடர்ச்சி) வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 2/3 வானைத் தொடும் அளவிற்கு உள்ளதாகக் கருதும் வகையில் உயர்ந்த மாடிக் கட்டடங்கள் இருந்தன என்பதற்காக வான் தோய் மாடம் என்றும் விண்ணை நெருங்கும் அளவிற்கான உயரம் எனக் கருதும் அளவிற்கு மாடிகள் அமைந்த கட்டடங்கள் இருந்தன என்பதற்கு அடையாளமாக விண்தோய் மாடம் என்றும் சங்க இலக்கியங்களில் குறிக்கப் பெற்றுள்ளன. நகரம் என்பதே பல மாடிகள் உடைய வீடுகள் நிறைந்தது என்பதே வழக்கம் என்னும் அளவிற்கு நகரங்கள் இருந்தன….
காலணிகளைக் கவினுற அமைத்தனர், அன்றே சொன்னார்கள் 37- இலக்குவனார் திருவள்ளுவன்
(உயிரறிவியலில் உயர்ந்த நிலையில் இருந்தனர் – யானை (1) தொடர்ச்சி) காலணிகளைக் கவினுற அமைத்தனர் கற்களிலும் முட்களிலும் நடக்க வேண்டிய தேவை ஏற்பட்ட பொழுது அதனால் ஏற்படும் துன்பத்தில் இருந்து விடுபட மனிதன் தொடக்கக் காலத்திலேயே கால்களில் எதையோ அணியும் பழக்கம் உருவாகியிருக்க வேண்டும். அதுவே மக்கள் கூட்டத்தின் நாகரிகத்திற்கேற்ப வெவ்வேறு காலணிகளாக வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அமெரிக்காவில் ஒரேகான்(Oregon) பகுதியில் உள்ள கற்கோட்டைக் குகையில் (Fort Rock Cave) 10,000 ஆண்டுக்காலத் தொன்மையான காலணிகள் 1938இல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. 2009இல் ஆர்மேனியாவில் குகை…
பொற்காசுகளால் பொலிந்த தமிழகம் – அன்றே சொன்னார்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்
பொற்காசுகளால் பொலிந்த தமிழகம் நாணயங்கள் பயன்படுத்தும் காலம் வந்தபொழுது மாழைகளால் – உலோகங்களால் – காசுகள் உருவாக்கிப் பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டது. (இ)லிதியன் மக்கள்தாம் முதன் முதலில் தங்கத்திலும் வெள்ளியிலும் காசுகள் அடித்ததாக கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த எரொதத்தசு (Herodotus) என்னும் கிரேக்க வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார். எனினும் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்குத் தமிழ்நாட்டில் பொற்காசுகள் மிகுதியாகப் பயன்பாட்டில் இருந்துள்ளன. மக்களுக்கு உவமையாகக் கூறும் அளவிற்கு அனைத்து நிலைகளிலும் பயன்பாட்டில் இருந்துள்ளமை அக்கால மாழை (உலோக)ப் பயன்பாட்டையும் செல்வச் செழிப்பையும் நமக்கு…