ஐவருக்குச் செம்மொழி வேள் விருது – பாராட்டு விழா 2022, சென்னை
மும்பை இலெமுரியா அறக்கட்டளை, தமிழ் அறக்கட்டளை, பெங்களூரு ஆகியன சார்பில் “செம்மொழி வேள்” விருது – பாராட்டு விழா 2022 தலைமை : முனைவர் மு.ஆறுமுகம் அமெரிக்காவின் ஆர்வர்டுபல்கலைக் கழகத் தமிழ்இருக்கை ஆட்சிக்குழு உறுப்பினர் வரவேற்புரை : மும்பை சு.குமணராசன் மும்பை இலெமுரியாஅறக்கட்டளை நிறுவனத்தலைவர் நிகழ்விடம் : சென்னை இராசாஅண்ணாமலைபுரம், முத்தமிழ்ப் பேரவை இராசரத்தினம் கலையரங்கம் நாள் : வைகாசி 29, 2053 /12.6.2022 ஞாயிறு மாலை 5.30 மணி செம்மொழிவேள் விருது, பாராட்டுவிழா – 2022, நிகழ்ச்சிக்கு நிகழ்த்துகிறார். முதன்மை விருந்தினர்…
சிறாருக்கான குறள் விருந்து மின்னிதழ்
சிறாருக்கான குறள் விருந்து மின்னிதழ் சிறுவர் சிறுமியர் குறள்நெறி வழி நடைபோட வந்துள்ள திங்கள் மின்னிதழ் குறள் விருந்து. உலகத்திருக்குறள் இணையக் கல்விக்கழகத்தால் இலவச இணைய இதழாக வெளியிடப்பெறுகிறது. இதன் ஆசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார். பொறுப்பாசிரியர் முற்போக்குப்பாவலர் திருவாட்டி தாமரை சீனிவாசராவு. முனைவர் முரசு நெடுமாறன் சிறப்பாசிரியராக உள்ளார். பொறி தி.ஈழக்கதிர் இணை ஆசிரியராக உள்ளார். கம்போடியா அங்கோர் தமிழ்ச்சங்கப் பொருளாளராகவும் உள்ள இதன் பொறுப்பாசிரியர் திருவாட்டி தாமரை சீனிவாசராவு எழுதிய தலைமைப்பண்பிற்கு உயிர்நேயம் தேவை என வலியுறுத்தும் வகுப்பறை-சிறுவர் கதை விருந்து…
பிரிந்து மறைந்தது முறையா ஐயா? —மறைமலை இலக்குவனார்
புலவரேறு பெ.அ.இளஞ்செழியன் [வைகாசி 28, 1969 / 10.06.1938 – ஐப்பசி 14,2052 / 31.10.2021] பிரிந்து மறைந்தது முறையா ஐயா? அன்பே உருவாய் ஆட்கொண் டீரே பண்பின் வடிவாய் எமைக் கவர்ந்தீரே நட்பின் இலக்கணம் கற்பித்தீரே பிரிய இயலாப் பரிவின் உருவே பிரிந்து சென்றிட எப்படி ஒப்பினீர்? காலம் முழுமையும் கட்சிக்கு உழைத்தீர்! காலணாப் பயனும் கருதா மனத்தீர்! திராவிட இயக்கப் பாவலர் அணியில் முன்னணி வரிசை முதல்வர் நீவிர்! அண்ணா கலைஞர் பேராசிரியர் எந்நாளும் நீர் போற்றிடும் நாவலர் அனைவரும் …
பேராசிரியர் மதியழகி வாழ்க! பேரன்புத் தங்கை மதியழகி வாழ்க!
பேராசிரியர் மதியழகி வாழ்க! பேரன்புத் தங்கை மதியழகி வாழ்க! பல்வித்தகமும் பாங்குறப் பயிற்றும் நல்லாசிரியராய் நற்பணி ஆற்றியும் தமிழ்த்துறைத் தலைவராய்த் தகைமை தாங்கியும் கல்விநிலையக் கனிவுறு முதல்வராய் பல்கலைக்கழகப் பேரவைக் குழுவிலும் கல்லூரி ஆசிரியர் போராட்டத்திலும் முத்திரை பதித்த போராளியாகவும் அயர்விலாப் பணிகள் ஆற்றிய மாண்பு அன்புத்தங்கை மதியழகிக்கே என்றும் உரியது; வாழ்க! வாழ்க! எழுபான் அகவை எய்தும் இந்நாளில் முழுநிறை அன்புடன் வாழ்த்தி மகிழ்கிறேன்! பேராசிரியர் மதியழகி வாழ்க! பேரன்புத்தங்கை மதியழகி வாழ்க! புதல்விகள் இருவரும் பேரனும் பேத்தியும் எல்லா நலனும்…
கலைஞர் செம்மொழித் தமிழ் விருதுகள் பத்தாண்டிற்கு அறிவிப்பு
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர். மு.கருணாநிதி செம்மொழித்தமிழ் விருதுகள் 2010 முதல் 2019 வரையிலான பத்து ஆண்டுகளுக்கு வழங்கப்படாமல் இருந்தன. தற்போது முதல்வரின் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றவுடன் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வளர்ச்சிக்கான முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. அவ்வகையில் நிறுவனத்தின் 8- ஆவது ஆட்சிக்குழுக் கூட்டம் முதல்வரின் தலைமையில் 30.08.2021 அன்று நடைபெற்றது. தமிழக முதல்வரால் அமைக்கப் பெற்ற விருதுத் தேர்வுக் குழுவினரால் கீழ்க்காணும் பத்து விருதாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்: 1. 2010 – முனைவர் வீ.எசு. இராசம், (Former Senior…
முதுமுனைவர் இரா.இளங்குமரனார் நினைவேந்தல் 08.08.21
(தை 17, 1951 / 30.01.1930 ***ஆடி 09, 2052 / 25.07.2021) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் புலவர்மணி முதுமுனைவர் இரா.இளங்குமரனார் இணையவழி நினைவேந்தல் ஆடி 23/2052 ஞாயிறு 08.08.21 காலை 10.00 மணி கூட்ட எண் 864 136 8094 புகு எண் 12345 தலைமை & நினைவுரைஞர்கள் அறிமுக உரை : இலக்குவனார் திருவள்ளுவன் இணை நிகழ்த்துநர்: தோழர் தியாகு தொடக்க நினைவுரை : முனைவர் மறைமலை இலக்குவனார் முதன்மை நினைவுரை : மாண்புமிகு கோ.தளபதி, ச.ம.உ நினைவுரைஞர்கள்:…
தமிழியக்கம் ஓய்ந்ததே! – மறைமலை இலக்குவனார்
தமிழியக்கம் ஓய்ந்ததே! இல்லாகியரோ காலை மாலை அல்லாகியர் யாம் வாழும் நாளே! நில்லா உலகில் நிலைத்த புலமையும் எல்லாத் துறையிலும் நிறைந்த அறிவும் பல்லாயிரம் நூல் படைத்த திறமும் ஓருருவாக ஒளிமிளிர்ந்தனரே! கூர்த்த நுட்பமும் சீர்த்த மதியும் ஆர்த்த சொல்வன்மையும் வாய்த்த இவரை அனைத்துத் தமிழரும் உச்சிமேற் போற்றினர்; காழ்த்த சிந்தை கடனெனக் கொண்டு பாழ்த்த கூற்றுவன் உயிர்பறித்தனனே! மாணவர் தமக்கெலாம் மாசறு விளக்காய் புலவர்க்கெல்லாம் பொலிவுறு தலைவராய் இலக்கிய ஆர்வலர் கலக்கம் போக்கித் துலங்கிடும் கலங்கரை விளக்கமாகவே வாழ்நாளெல்லாம் வயங்கிய மாமணி;…