பூணூல் அணிந்திருக்கும் போது, ஒழுக்கக் கேடான செயல்கள் செய்யமாட்டார்கள் என்பது சரியா? – இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் பொய்யும் மெய்யும்: 17- 19 – தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும்: 20-21 நால்வகைச் சாதியிந் நாட்டில் நீர் நாட்டினீர் மேல்வகை கீழ்வகை விளங்குவது ஒழுக்கால் என்றும் குலமும் ஒன்றே குடியும் ஒன்றே இறப்பும் ஒன்றே பிறப்பும் ஒன்றே என்றும் கபிலர் அகவல் கூறுவது சனாதனத்திற்கு எதிர்ப்பாகத்தானே. எனவே, தொடர்ச்சியாகச் சனாதனம் இருப்பதாகப் பெருமை பேசுநர், தொடர்ச்சியாக அதற்கு எதிர்ப்பு இருப்பதையும் உணர்ந்து அடங்கி ஒடுங்க வேண்டும். பூணூல் அணிந்த பிராமணர்கள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதற்குக் காவல் துறையும் நீதித்துறையும் ஊடகங்களுமே சான்றாகும்….
குறள் கடலில் சில துளிகள் 23. நல்லன செய்யாது செல்வத்தை அழிக்காதே! – இலக்குவனார் திருவள்ளுவன்
(குறள் கடலில் சில துளிகள் 22. உன்னைத் திருத்திய பின் ஊரைத் திருத்து! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 23. நல்லன செய்யாது செல்வத்தை அழிக்காதே! செயற்பால செய்யா திவறியான் செல்வம் உயற்பால தன்றிக் கெடும். (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: குற்றங்கடிதல், குறள் எண்: ௪௱௩௰௭ – 437) நல்ல செயல்களுக்குப் பயன்படுத்தாதவன் செல்வம் பயனின்றி அழியும் என்கிறார் திருவள்ளுவர். பதவுரை: செயல்பால-செய்யவேண்டியவை; செய்யாது-செய்யாமல்; இவறியான்-(மிகையான பொருட்) பற்றுக்கொண்டு அதைச் செலவழிக்காதவன், கருமி; செல்வம்-பொருள்; உயல்பாலது-மீட்கத்தக்கது, உய்யுந்தன்மை, தப்புதலுக்குரியது, உளதாகுதல், ஒழிக்கத்…
நூல் என்றால் திருக்குறளே! – மு.கருணாநிதி
நூல் என்றால் திருக்குறளே! ஈராயிரம் ஆண்டின் முன்னும் இன்றுபோல் இளையவளாய் இருந்திட்ட தமிழாம் அன்னை நூறாயிரம் கோடி என ஆண்டு பல வாழ்வதற்கு நூலாயிரம் செய்திட்ட புலவர்களை ஈன்றிட்டாள் எனினும்; கலைமகளாம் நம் அன்னை வள்ளுவனைத் தலைமகனாய்ப் பெற்றெடுத்தாள். மலர் என்றால் தாமரைதான் நூல் என்றால் திருக்குறளே எனப் போற்றும் அறப்பனுவல் அளித்திட்டான்; மாந்தரெல்லாம் களித்திட்டார். கலைஞர் மு.கருணாநிதி: இரவலாக உன் இதயத்தைத் தந்திடண்ணா
பெரியார் – ஆரியத்தின் அடிப்பீடமாட்டும் சூறாவளி – கலைஞர்
பெரியார் – ஆரியத்தின் அடிப்பீடமாட்டும் சூறாவளி “இனத்தினிலே கோளாறு புகுத்தி வைத்தோர் இடிமுழக்கம் கேட்பதுபோல் – திணறிப் போனார் பின்னி வைத்த மதங்கடவுள், மடத்தன்மை யெல்லாம் மின்னலது வேகத்தில் ஓடியதுகாண்! பாராட்டிப் போற்றி வந்த பழமைலோகம் ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார். ஈவெரா என்ற வார்த்தை இந்நாட்டு ஆரியத்தின் அடிப்பீடம் ஆட்டுகின்ற சூறாவளியாம்! அவர் வெண்தாடி அசைந்தால் போதும் கண் சாடை தெரிந்தால் போதும்; கறுப்புடை தரித்தோர் உண்டு நறுக்கியே திரும்பும் வாள்கள் !!” -கலைஞர் மு.கருணாநிதி (1945)
இடைத் தேர்தலும் தி.மு.க.வும் அ.இ.அ.தி.மு.க.வும்
எதற்குக் குறுக்கு வழிகள்? அறவழி அரசியலுக்கு வழி வகுக்க வேண்டும்! இடைத்தேர்தல் என்பது தேவையற்ற ஒன்று என்பது ஒரு சாரார் எண்ணம். எந்தக் கட்சியின் உறுப்பினர் வெற்றி பெற்றிருந்தாரோ அக்கட்சியே அடுத்த உறுப்பினரை அறிவிக்கலாம் என்பர். ஆனால், கட்சிச்சார்பின்றித் தனித்து நின்று வெற்றிபெற்றவர் தொகுதி என்றால் அத்தொகுதியிடம் காலியாகும் பொழுது யாரைக்கொண்டு அவ்விடத்தை நிரப்புவார்கள். மேலும், வெற்றி பெற்ற கட்சிக்கே அடுத்த உறுப்பினரைத் தெரிவு செய்து அனுப்பும் உரிமை கொடுத்தால் என்ன ஆகும்? வெற்றி பெற்று உறுப்பினராக உள்ளவரின் உயிருக்கு உலைவைக்கலாம். மக்கள்…