(திருத்துறைக் கிழார் கட்டுரைகள் – க௪. தமிழுக்குச் சிறை?) ஆ. தமிழர்க.பண்டைத் தமிழர் கண்ட அறிவியல் நுணுக்கங்கள் பண்டைத் தமிழர் அறிவியலறிவு படைத்தவராக இருந்தனர் என்பதைத் தமிழ் இலக்கியம், இலக்கணங்களில் இலைமறைகாய் போலப் பரவலாகக் காணலாம். ஏன்? சில சொற்கள் கூட அறிவியல் கருத்துகள் பொதிந்தனவாக உள்ளனவென்பது நுணுகிக் காண்பார்க்குப் புலனாகும். தமிழ்ச்சொற்கள் யாவும் பொருள் குறித்தனவே என்பதை ஒல்காப்புகழ்த் தொல்காப்பியம் வலியுறுத்துகின்றது. காட்டாக, ஞாலம், ஞாயிறு, உலகம் என்னும் சொற்களைக் காண்போம். ஞாலம் என்றால் அசைதல் என்றும், ஞாயிறு என்றால் பொருந்தியிருப்பது என்றும்,…