(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-11 : மொழிப்போரில் மகளிர் பங்களிப்பு – 2 : தொடரச்சி) மொழிப்போர் வரலாறு அறிவோம்! -12 தமிழ்க்காப்பிற்காகவே இந்தியை எதிர்த்தனர் மொழிப்போரில் மகளி்ர் பங்களிப்பு  குறித்து, அதிலும் குறிப்பாக மொழிப்போரில் சிறை புகுந்த வீராங்கனைகள் குறித்து முந்தைய இதழ்களில் பார்த்தோம். 13.11.1938ஆம் ஆண்டு நடைபெற்ற பெண்கள் மாநாடு குறித்த செய்தியையும் பார்த்தோம். இம் மாநாட்டில் மீனாம்பாள் சிவராசு தமிழ்மொழி,  தமிழ்ப் பண்பாட்டுக்காக மன உறுதியோடு போராட முன்வர வேண்டும் என்று பெண்களை வேண்டினார். இதுவே தமிழ் உணர்வுடன் தமிழுக்காக, உயிருக்கும்…