வெருளி நோய்கள் 1016-1020: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1011-1015 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1016-1020 சாம்பல் நிறம் தொடர்பானவற்றின் மீது ஏற்படும் வெறுப்பும் அளவுகடந்த பேரச்சமும் சாம்பல்நிற வெருளிசாம்பல் நிறம் நடுவுநிலைமை, ஒத்துப்போதல், சலிப்பு, ஐயப்பாடு, முதுமை, புறக்கணிப்பு, நாணம் ஆகியவற்றுடன் தொடர்புடைய குறியீடாக விளங்குகிறது.glauco என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் சாம்பல்நிறம்.00 தனித்திராமல் பிறரைச் சார்ந்திருக்கும் சார்பு(dependence on others) நிலை குறித்த வரம்பற்ற பேரச்சம் சார்பு வெருளி.தற்சார்பின்றிப் பிறரை அண்டியிருத்தல் உரிய செயலைக் குறித்த காலத்தில் முடிப்பது குறித்த கவலையை உருவாக்கும். சார்தலுக்குரியவர் எதிர்பார்க்கும் உதவியைச் செய்யாமல்…
