தொல்லியல் ஆய்வாளர் வைகை அனீசு மறைந்தார்!
அன்னையிடம் சென்றாயோ நண்பா! அகரமுதல இதழின் படைப்பாளரும் செய்தியாளரும், தொல்லியல், மாந்தரியல், கல்வெட்டியல், முதலான துறைகளின் ஆய்வாளரும் நூலாசிரியரும் கட்டுரையாளரும், தொலைக்காட்சிகள், இதழ்கள் ஆகியவற்றின் செய்தியாளருமான வைகை அனீசு (அகவை 44) ஐப்பசி 20, 2046 / நவ.06 வெள்ளியன்று அகால மரணமுற்றார் என்னும் வருத்தமான செய்தியைத் தெரிவிக்கின்றோம். நேற்று (ஐப்பசி 21, 2046 / நவ.07) யாமம் / இன்று (ஐப்பசி 22, 2046 / நவ.08) வைகறை 1.00 மணியளவில் முனைவர் ஆதிரை முல்லையின் முகநூல் வழியாகச் செய்தி…
என்ன செய்யப் போகிறோம்? – பா.செயப்பிரகாசம்
மதவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக அறிக்கை போதுமா? மூடநம்பிக்கைகளுக்கு எதிராய் எழுதியும் பேசியும் வந்த கன்னட எழுத்தாளர் ’கல்புர்கி’ சில மாதங்கள் முன்பு கொலை செய்யப்பட்டார். அவர் முதலான மூன்று எழுத்தாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். எழுத்தாளர் கே. எசு. பகவான் போன்றோர் மதவாதஆற்றலா்களின் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளார்கள். அடிப்படை மதவாத ஆற்றலர்களின் அச்சுறுத்தலுக்கு எதிராய் எழுத்துலகில் குமுறல் மையம் கொண்டுள்ளது. எதிர்வினை ஆற்றாத சாகித்ய அகாதமி நிறுவனத்தின் போக்கைக் கண்டித்து, மதவாதச் செயற்பாட்டாளர்களின் காவலனாக முன்னிற்கும் அரசுக்கு எதிர்ப்பைத் தெரிவித்து எழுத்தாளர் நயனதாரா சேகல், சாகித்ய…
மூளைச் சலவைக்கு உள்ளாகும் இந்தியர்கள்- மின்னஞ்சல் சிவா ஐயாத்துரை
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உள்ள அரங்கத்தில்’சுவாசம் சாப்ட்’ விருதுகள் தொழிற்துறை சார்ந்த வல்லுநர்கள் 75 பேர்களுக்கு வழங்கப்பட்டன. வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ‘சுவாசம் சாப்ட்டு’ தலைவர் கிருட்டிணன், செயல் அதிகாரி கார்த்திகேயன், நிதி அதிகாரி கணேசு, கோவிலுார் ஆதினம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமி, மரு. சுரேந்திரன், வித்யாகிரி பள்ளி முதல்வர் சுவாமிநாதன் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினாராகப் பங்கேற்ற மின்னஞ்சலை(‘இ மெயிலை’)க் கண்டுபித்த சிவா ஐயாத்துரை, “வெளிநாட்டவரால் நாம் மூளைச் சலவை செய்யப்படுகிறோம்” என்றார். அவர் உரை வருமாறு:- …
மெய்யப்பனார் 83 ஆம் பிறந்தநாள் பெருமங்கல விழா – நிகழ்ச்சிப்படங்கள்
ஆனி 02, 2046 /21.06.201 ஞாயிறன்று சென்னை உமாபதி அரங்கத்தில் பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பனார் 83 ஆம் பிறந்தநாள் பெருமங்கல விழா மெய்யப்பனார் அறக்கட்டளை விருது வழங்குவிழா நூல்கள் வெளியீடு ஆகியன நடைபெற்றன. (பெரிய அளவில் பார்க்கப் படங்கள் மேல் சொடுக்கவும்) நிகழ்ச்சி விவரம்
மெய்யப்பனார் 83 ஆம் பிறந்தநாள் பெருமங்கல விழா
பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பனார் 83 ஆம் பிறந்தநாள் பெருமங்கல விழா மெய்யப்பனார் அறக்கட்டளை விருது வழங்குவிழா நூல்கள் வெளியீடு ஆனி 02, 2046 /21.06.2015
சின்னக்குத்தூசி விருது வழங்கு விழா
வைகாசி 32, 2049 / சூன் 15, 2015
இலக்குவனார் இலக்கியப் பேரவை 100 ஆவது நிகழ்வு ஒளிப்படங்கள்
சென்னை, அம்பத்தூர் வைகாசி 2, 2046 / மே 16, 2015 சனிக்கிழமை (படத்தின் மேலழுத்திப் பெரிதாகக் காண்க.)
இலக்குவனார் இலக்கியப் பேரவை 100 ஆவது நிகழ்வு
முப்பெருவிழா நூல் வெளியீடு தொல்காப்பியர் விருது, திருவள்ளுவர் விருது, இலக்குவனார் விருது வைகாசி 2, 2046 / மே 16, 2015 சனிக்கிழமை அம்பத்தூர், சென்னை
செவிலியர்கள், விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்!
இந்தியச் செவிலியர் சங்கம் (Trained Nurses Association of India – TNAI ) தமிழ்நாடு கிளை ( Tamilnadu State Branch – TNSB ) உலகச் செவிலியர் நாளன்று செவிலியர் விருதுகளை வழங்குகிறது. சிறந்த தொண்டு சிறந்த ஆசிரியர் சிறந்த நிருவாகி ஆகிய அடிப்படையில் விருதுகள் வழங்கப்பெறும். பொது நல்வாழ்வுத் துறை, மருத்துவமனைகள், செவிலியர் கல்வி நிறுவனங்கள் முதலானவற்றில் சிறப்பாகச் செயல்படும் செவிலியர்களைத் தேர்ந்தெடுத்து இவ் விருதுகள் வழங்கப்பட உள்ளன. தகுதி உடையவர்கள் தங்கள் முழு விவரத்துடன்…
“செல்லமே மாற்றத்தை உருவாக்குவோம்” விருதுகள் வழங்கும் விழா
‘செல்லமே’ மாத இதழ் சார்பில் 2014 ஆம் ஆண்டிற்கான “செல்லமே மாற்றத்தை உருவாக்குவோம்” விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. தமிழில் பெற்றோருக்காக வெளிவருகின்ற வார இதழான ‘செல்லமே’ தன்னுடைய முதலாவது பிறந்தநாளினை முன்னிட்டுத் தமிழ்நாட்டில் பல்வேறு திறமைகளைக்கொண்டு, மக்களுக்காகத் தங்களை ஒப்படைத்துக்கொண்ட, மற்றவர்களால் அறியப்படாத 10 அருவினையாளர் (சாதனையாளர்)களுக்கு விருது வழங்கும் விழா சென்னை, கந்தன் சாவடியில் நடைபெற்றது. இவ்விழாவில், விருது வழங்கப்பட்ட அருவினையாளர்களில் 12 அகவை யோகேசு என்ற சிறுவனும் அடக்கம். இவர் ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் மின்னணுத்துடைப்பான் ஒன்றினைக்…
‘இலக்கியச் சோலை’ மாத இதழின் ஐந்தாம் ஆண்டு விழா
‘இலக்கியச் சோலை’ மாத இதழின் ஐந்தாம் ஆண்டு விழா ஆசிரியர்களுக்கு விருது கவிஞர்களின் பார்வையில் வ.உ.சி., கவிதை நூல் வெளியீடு டாக்டர் குப்பச்சாரியின் நூல் வெளியீடு வாசகர்களுக்கு பரிசு… பாராட்டு… நாள் : ஐப்பசி 2, 2045 / 19.10. 2014 ஞாயிறு காலை 10-00 மணி இடம் : அம்ரிசு திருமண மண்டபம்… திரு.வி.க. நகர் பேருந்து நிலையம் அருகில்… பெரம்பூர், சென்னை – 600 011. அனைவரும் வருக… வருக… அழைப்பில் மகிழும்… : சோலை தமிழினியன், 90420 27782,…
மெய்யப்பனார் பிறந்தநாள்விழா
மணிவாசகர் நூலக நிறுவனர் மெய்யப்பனார் பிறந்தநாள்விழாவில் ஊரன் அடிகளார் சிறந்த தமிழறிஞர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார் மணிவாசகர் நூலக நிறுவனர் மெய்யப்பனார் பிறந்தநாள்விழாவில் ஊரன் அடிகளார் சிறந்த தமிழறிஞர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். ஆனி 07, 2045 / 21/6/14 அன்று சென்னையில் தினமணி விழா உட்பட ஐந்து பெரும்விழாக்கள்.எனினும் மெய்யப்பனார் அன்பர்கள் திரளாக வந்து விழாவைச்சிறப்பித்தனர்.(முன்னால் சிலம்பொலியார் பின்னால் ஆத்திரேலியா அன்பர்சிரீகந்ததாசா நெல்லைசு.முத்து, உதயைமு.வீரையன், முனைவர் அறவாணன், எழுகதிர்அரு.கோ.எனப் பல சான்றோர்கள் வந்திருந்து விழாவைச் சிறப்பித்தனர். (படத்தொகுப்பு: படங்களைச் சொடுக்கிப் பார்க்கவும்) தரவு: …