வெள்ளாளர் கல்வி விழா!

கன்னியாகுமரி வெள்ளாளர் பேரவை நடத்தும் மாபெரும் வெள்ளாளர் கல்வி விழா! 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பொறியியல் கல்லூரியில் ‘தங்க விருது’ பெற்றவர்கள், அரசு/தனியார் பள்ளிகள/தொழில் நுட்பக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கும் விழா எனக் கல்வி சார்ந்த அனைத்தையும் உள்ளடக்கி மாபெரும் ‘வெள்ளாளர் கல்வி விழா’, கன்னியாகுமரி வெள்ளாளர் பேரவை வரும் மே 31ஆம்  நாள் மாலை 4 மணிக்கு நகர்கோவில், வடசேரியில் உள்ள  இலெட்சுமி மகாலில் நடத்தப்படுகிறது. இவ்விழாவிற்கு, சான்றுரை வழக்குரைஞர் திரு. என். சிதம்பரதாணு…

கவிஞர் மு.முருகேசிற்கு இரண்டு இலக்கிய விருதுகள்

        வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு  ஊரைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசு.   இவர், புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகருணத்தில் பிறந்தவர்.  இவருக்கு, புதுச்சேரியில் நடைபெற்ற விழாவில்  (மார்ச்சு 2014)கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிதை விருது வழங்கினார்.          இவ்விழாவிற்கு, தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பன் தலைமையேற்றார். விழாக்குழு ஒருங்கிணைப்பாளர் தி.அமிர்தகணேசன் அனைவரையும் வரவேற்றார்.          புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் முதன்மைச் சீடர்களில் ஒருவரும், சென்னை புதுக்கல்லூரி மேனாள் தமிழ்ப் பேராசிரியரும், தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருமான   கவிஞர் ஈரோடு தமிழன்பனின் 80-ஆவது பிறந்த நாள் விழா புதுச்சேரியிலுள்ள விவேகானந்தா மேனிலைப்பள்ளியில்…

செய்திக் குறிப்புகள் சில

      உலக  மக்கள் தொகையில் எழுத, படிக்கத் தெரியாதவர்களில் 37% இந்தியாவில்தான் இருக்கிறார்கள்  – அனவைருக்குமான கல்வி இயக்க அறிக்கை(EFA Global Monitoring Report, 2013-14)        பெரியாண்டி என்னும் நூறு அகவை மூதாட்டியைப்  பேணும் மதுரை இடையப்பட்டியைச்  சேர்ந்த  6 ஆம் வகுப்பு பயிலும் அருச்சனாவிற்கு திரிபுரா அறக்கட்டளை சார்பில் நம்பிக்கை நாயகி விருது வழங்கப்பட்டது.       பாம்பிடம் இருந்து சிறிய குழந்தையைக் காப்பாற்ற உதவியதற்காக வேலூர் மாவட்டம் மீஞ்சூரைச் சேர்ந்த விசாலானி என்கிற சிறுமிக்கும்,       பள்ளியை விட்டு இடையிலேயே நின்ற…

எண்மருக்குத் தமிழக அரசின் விருதுகள் வழங்கப் பெற்றன

பண்ருட்டி ராமச்சந்திரன்  முதலான எண்மருக்குத்  தமிழக அரசின் சிறப்பு விருதுகளை முதல்வர்  செயலலிதா வழங்கினார். தமிழுக்குத் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் தமிழ்நாடு அரசால் விருதுகள் ஏற்படுத்தப்பட்டு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2014-ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது தைவான் நாட்டைச் சேர்ந்த கவிஞர் யூசி என்பவருக்கு வழங்கப்பட்டது. பிற விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு 26.1.2014 அன்று தலைமைச் செயலகத்தில் முதல்– அமைச்சர் செயலலிதா  வழங்கினார்; தமிழ்நாடு அரசின் விருதுகளான தந்தை பெரியார் விருதினை-சுலோச்சனா சம்பத்துக்கும், பேரறிஞர்…

மூளையே மூலதனம் – அறிவுநிதி விருது

 – தன்னம்பிக்கைத் தொடர் நிகழ்ச்சி                 “2009 இல் ‘இலக்கு ‘ என்னும் பல்கலைப் பயிலரங்கம் நிறுவி ஓவியம், கையெழுத்து எனக் குழந்தைகளுக்கான வழக்கமான பயிற்சிகளுடன் நினைவாற்றல், தன்னம்பிக்கை ஆளுமைத் திறன்,  குமுகாயச் சிந்தனை ஆகிய பிரிவுகளிலும் கோடைக்கால முகாம்களை நடத்தினோம், தற்போது இதன் விரிவாக்கமாக வறுமை, இயலாமை, வழிகாட்டுதல் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களால் தடம் மாறும் இளைஞர்களுக்காக ‘மூளையே மூலதனம்‘ என்னும் பெயரில் ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு தலைப்புகளில் அறிவுசாரர் பெருமக்களின் எழுச்சியூட்டும் தன்னம்பிக்கை உரைவீச்சுகளுக்கு…

சாகித்ய அகாதமி விருதுகள் அறிவிப்பு: தமிழில் ‘கொற்கை’ புதினத்திற்கு விருது

   2013- ஆம் ஆண்டுக்கான சிறந்த இலக்கியப் படைப்புகளுக்குரிய சாகித்ய அகாதமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அகாடமியின் தலைவர் விசுவ நாத்து பிரசாத்து திவாரி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள், நூலாசிரியர்களின் பட்டியலை 18.12.13 புதன்கிழமை அன்று வெளியிட்டார்.   தமிழ்,வங்காளம், உருது,  தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலான 21 மொழிகளில் கவிதை,  புதினம், சிறுகதை,  தன்வரலாறு ஆகிய பிரிவுகளில் சிறந்த படைப்புகள் இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன.   தமிழில் ‘கொற்கை’  என்னும் புதினத்திற்காக  ஆசிரியர்  சோ டி குரூசுக்கு வழங்கப்படுகிறது. கவிஞர்களுக்கு இந்த ஆண்டு…

சாகித்திய அக்காதெமி போக்கை மாற்றிக்கொள்ள பேரா. மறைமலை வேண்டுகோள்!

   சாகித்ய அகாதெமி 2013- ஆம் ஆண்டுக்கான படைப்பிலக்கிய விருதுகளை அறிவித்துள்ளது.  இவற்றுள், தமிழ்க்கவிதைப் படைப்பிற்கான  விருது எதுவும் அறிவிக்கப்படவில்லை. இது குறித்துக் கண்டித்துப் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார்,  சாகித்ய  அகாதெமி, இனியேனும் தன்  போக்கை  மாற்றிக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அவரது வேண்டுகை வருமாறு :-    தமிழ் ஒரு கவிதைமொழி எனப் போற்றுகிறோம். மென்மையும் நுண்மையும் பண்பாட்டு மேன்மையும் கொண்ட தமிழ்க்கவிதை உலகெங்கும் போற்றப்பட்டுவருகிற சூழல் மகிழ்வளிக்கிறது. ஏனைய மொழிப்பிரிவுகளில் அடிக்கடி கவிதைநூல்கள் சாகித்திய அக்காதெமி விருது பெறுவதைக்…