சிரியுங்கள் – வெ.அரங்கராசன்
சிரியுங்கள் [ இடுக்கண் வருங்கால் நகுக – திருக்குறள் 063: 0621 ] சிரியுங்கள்…சிரியுங்கள்…. சிந்தை குளிரச் சிரியுங்கள்…. சந்திப்புத் தொடரவே சிந்தித்துச் சிரியுங்கள்…. சிரித்தாலும் சிரியுங்கள்—பிறர் சிரிக்காத போதும் சிரியுங்கள்…. சிரிப்புக்காகச் சிரிக்காமல் சிரிப்பதற் கென்றே சிரியுங்கள்…. மனத்தால் மனம்சேரச் சிரியுங்கள்….. மனத்தை மதித்துச் சிரியுங்கள்….. மனம்விட்டுச் சிரியுங்கள்…. மனம்மகிழ்ந்து சிரியுங்கள்….. நோய்விட்டுப் போக வாய்விட்டுச் சிரியுங்கள்….. காய்விட்டுக் கனிதொட்டுத் தேன்சொட்டச் சிரியுங்கள்…. நொந்துபோன நெஞ்சினிலே வந்துவாழும் நோய்கள் எல்லாம் வெந்து வீழ்ந்து சாகும்படி முந்தி வந்து சிரியுங்கள்….. யாழிசை மழலையின் ஏழிசைச் சிரிப்பே போல வாழும் காலம் எல்லாம் கோலம் கொள்ளச் சிரியுங்கள்….. முதல்நாள் சிரிப்பது போலவே முப்பதாம் நாளும் சிரியுங்கள்…. மூலதனமாய்ச் சிரிப்பும் அமைவதால், முழுமை மனத்துடன் சிரியுங்கள்….. சோகப் பயிர்கள் சாகும்படி சிரியுங்கள்…. சுகம்மிகு பயிர்கள் செழிக்கும்படி சிரியுங்கள்…. சந்தி சிரிக்காமல் இங்கிதம் தெரிந்து சந்தமாய்ச் சிரியுங்கள்…. சந்தனமாய்ச் சிரியுங்கள்…. ஒப்புக்குச் சிரிக்காமல் உண்மையாய்ச் சிரியுங்கள்…. எண்ணத்தில் குழிஏதும் விழாமல் கன்னத்தில் குழிவிழச் சிரியுங்கள்….. ஆணவச் சிரிப்பின் வேரினை அறுத்தெறிந்து பாரினை வென்றிடப் பணிவோடு சிரியுங்கள்…. அசட்டுச் சிரிப்புக்குள் அகப்பட்டுக் கொள்ளாமல் இடம்அறிந்து— வெல்லும் தடம்அறிந்து சிரியுங்கள்….. விரக்திச் சிரிப்பினை விரட்டிவிட்டு—நல்ல நம்பிக்கை வந்[து]உதிக்கத்…
திருக்குறளில் வணிகவியல் மேலாண்மைக் கோட்பாடுகள் 2 – வெ.அரங்கராசன்
(சூன் 28, 2015 தொடர்ச்சி)2 11.0. வல்லுநர் கருத்து அறிதல் [EXPERT OPINION] ஒரு தொழிலை / வணிகத்தை / நிறுவனத்தை நடத்தும் போது, எதிர்பாராத விதமாகச் சில நடைமுறைச் சிக்கல்கள் தோன்றும். அவற்றைச் சரி செய்வதற்கு, அவற்றின் உள்ளும் புறமும் உள்ள அனைத்தையும் படித்த – ஆராய்ந்த – பட்டறிந்த – வல்லுநர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு பயன்கொள்ளலாம். இதுவும் ஒரு வணிக நடைமுறையே. இதையும் திருவள்ளுவப் பெருந்தகையார் தெளிந்துள்ளார்; தெரிவித்துள்ளார். இதனைச், செய்வினை செய்வான் செயல்முறை, அவ்வினை…
பேரா.வெ.அரங்கராசன் நூல்அறிமுகம் – புழுதிவாக்கம் தமிழ் இலக்கிய மன்றம்
வைகாசி 24, 2046 / சூன் 07, 2015
திருவள்ளுவமாலையின் சொல்நுட்ப மேலாண்மைத் திறன்கள் – பகுதி 1
முப்பாலுக்[கு] ஒப்புநூல்எப்பாலும்இல்லையால், அப்பாலைஎப்போதும்செப்புதலும், — அப்படியே ஒப்புடன்வாழுவதும், செப்பரியவாழ்வுதரும்; எப்பாலும்தப்பாச்சிறப்பு. [வல்லிசைவண்ணத்துநேரிசைவெண்பா] – பேராசிரியர் வெ.அரங்கராசன் 1.0. நுழைவாயில் பழம்பெரும்நூல்களுள் திருக்குறளுக்கு மட்டுமே போற்றுதலுக்கும், ஏற்றுதலுக்கும் உரிய திருவள்ளுவமாலை என்னும் ஓர் அருந்திறனாய்வுப் பெருநூல் கிடைத்துள்ளது. அந்நூல் 53 ஆற்றல்மிகு புலவர்களால் ஆக்கப்பட்டது. அப்பெரும்புலவர்கள் திருக்குறளை அணுகியும், நுணுகியும், வீழ்ந்தும், ஆழ்ந்தும் கசடறக் கற்றுத் தேர்ந்தவர்கள்; அதில் தோய்ந்தவர்கள்; கூர்ந்து ஆய்ந்தவர்கள்; ஐயத்தின் நீங்கித் தெளிந்தவர்கள்; நுண்பொருளையும் எண்பொருளாகக் கண்டவர்கள்; அதை மனத்தே…