இசை அமைப்பாளர் பரத்வாசு. 1330 திருக்குறள்களையும் 500 பாடகர்களைக் கொண்டு பாட வைத்துத் திருக்குறள் பாடற்பேழை உருவாக்குகிறார்.

 திரையிசையால் பணம் கிடைத்தாலும் மன நிறைவிற்காகத் திருக்குறள் பாடலிசை முயற்சியில் ஈடுபட்டுவருவதாக இசைஅமைப்பாளர் பரத்வாசு கூறுகிறார்.

அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பால்களுக்கும் தனித்தனிப் பண்கள்  அமைத்து  அவற்றைத் தனித்தனி பகுதிகளாக உருவாக்கி  உள்ளதாகவும், உலகம் முழுவதும் பயணம் செய்து தமிழ்ப் பாடகர்களைத் தேடிக் கண்டுபிடித்து 500 பேரை இதில் பாட வைத்திருப்பதகாவும் திரைப்பட முன்னணிப் பாடகர், பாடகிகளும் பாடியிருப்பதாகவும் கூறியுள்ளார்.

 “எதையும் சொற்களால் சொல்வதை விட இசையால் எளிமையாகச் சொல்லும்போது அது

மக்களைச் சென்று சேரும். அதற்குத்தான் இந்தப் பணியில் இறங்கினேன். எதிர்காலத் தலைமுறையினருக்குத் திருக்குறளை எடுத்துச் செல்லும் முயற்சி இது. வருகிற  சனவரி 17 ,  திருவள்ளுவர்  நாளன்று இதனை வெளியிடுகிறேன்”   என்றும் பரத்வாசு கூறியுள்ளார்.

பரத்வாசு இசையமைக்கும் – நந்தா,  அனன்யா முதலானோர் நடிக்கும் – அதிதி என்னும் தமிழ்ப்படத்தில் திருக்குறள் பாடல்ஒன்று இடம்  பெறுவதாகச்செய்திகள் கூறுகின்றன.