ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1211-1220) – இலக்குவனார் திருவள்ளுவன்
(ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1201-1210) தொடர்ச்சி)
ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!
(திருவள்ளுவர், திருக்குறள்,)
காமத்துப்பால்
122. கனவுநிலை உரைத்தல்
131 காதலர் தூதுரைத்த கனவினுக்கு, என்ன விருந்தளிப்பேன்? (1211)
132. கனவில் காதலரிடம் இருப்பதைச் சொல்ல கண்களே தூங்குக!. (1212)
133. நனவில் வராதவர் கனவில் வருவதால் உயிர் உள்ளது. (1213)
134. நனவில் வராதவரை வரவழைக்கும் கனவு. (1214)
135. நனவில் கண்டதும் இன்பம்; கனவில் காண்பதும் இன்பம். (1215)
136. நனவு வராவிடில், காதலர் கனவில் பிரியாரே! (1216)
137. நனவில் வராக் கொடியவர், கனவில் துன்புறுத்துவது ஏனோ? (1217)
138. உறங்கும் பொழுது தோளிலும் விழித்தால் நெஞ்சிலும் உள்ளார். (1218)
139. நனவில் இல்லை என நொந்துகொள்வோர் கனவில் காணாரோ! (1219)
140. நனவில் நீங்கினார் எனப் பழிப்போர் கனவில் காணாரோ (1220)
Leave a Reply