ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!(1221-1230)-இலக்குவனார் திருவள்ளுவன்
(ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1211-1220) தொடர்ச்சி)
ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!
(திருவள்ளுவர், திருக்குறள்,)
காமத்துப்பால்
அதிகாரம் 123. பொழுதுகண்டு இரங்கல்
- மாலை, பிரிந்தார் உயிர் பறிக்கும் வேல். (1221)
- மாலைப்பொழுதின் துணைவரும் என் தலைவர் போல் கொடியவரோ?(1222)
- பிரிவால் வாடும் என்னைப் பனியால் வாட்டுகிறதே மாலை! (1223)
- காதலர் இல்லாதபொழுது கொலையாளிபோல் வருகிறதே மாலை! (1224)
- காலைக்குச் செய்த நன்மை என்ன? மாலைக்கு இழைத்த தீங்கு என்ன? (1225)
- மாலை கொடியது என்பதை மணந்தவர் பிரியாக்காலை அறியவில்லை. (1226)
- வேளைதோறும் அரும்பி, மொட்டாகி மாலை மலரும் காதல்நோய் (1227)
- குழலிசையும் மாலையைக் கொல்லும் படையாகும். (1228)
- அறிவை மயக்கும் மாலை, ஊரையும் மயக்குமோ? (1229)
- பொருள்தேடிப் பிரிந்தவருக்காக மாயா உயிர் மாய்கிறதே.(1230)
Leave a Reply