(ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1241-1250) தொடர்ச்சி)

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!

திருவள்ளுவர்

திருக்குறள்

காமத்துப்பால்

126. நிறை அழிதல்

(காமவேட்கையால் தன்னிலை இழந்து உரைத்தல்)

  1. நாணப்பூட்டு உள்ள நிறை என்னும் கதவைக் காமக்கோடரி உடைக்கிறது.(1251)
  2. என் நெஞ்சத்தை நள்ளிரவிலும் ஆள்கிறதே காமம்! (1252)
  3. காமம் மறைக்க இயலாமல் தும்மல்போல் வெளியாகிறதே!(1253)
  4. மன உறுதியை மீறிக் காமம் வெளிப்படுகிறதே (1254)
  5. பிரிந்தார் பின் செல்லா மான உணர்வை காமநோயர் அறியவில்லையே! (1255)
  6. நீங்கினார் பின் சேரச்செல்லும் காதல் எத்தகையதோ? (1256)
  7. விரும்பியவர் விரும்பியவற்றைச் செய்தால் நாணத்திற்கு இடமேது? (1257)
  8. தலைவனின் பணிவான பேச்சன்றோ பெண்மை உடைக்கும் படை. (1258)
  9. நழுவினேன் ஊடி; நெஞ்சமோ கூடச் சென்றது; நானும் தழுவினேன். (1259)
  10. தீயில் இட்ட நிணம்போல் உருகும் நெஞ்சுடையார் ஊடலை உரைக்க இயலுமோ! (1260)

– இலக்குவனார் திருவள்ளுவன்

(தாெடரும்)