(அதிகாரம் 061.  மடி இன்மை தொடர்ச்சி)attai_kuralarusolurai

 02. பொருள் பால்
05. அரசு இயல்
அதிகாரம் 062. ஆள்வினை உடைமை

ஏற்றுக் கொண்ட செயல்முடிக்க,

இடைவிடாது செய்யும், நல்முயற்சி

 

  1. “அருமை உடைத்(து)”என்(று), அசாவாமை வேண்டும்;

      பெருமை, முயற்சி தரும்.

       “முடியாதது” என்று, மலைக்காதே;

         முயற்சி, பெருமையாய் முடியும்.

  1. வினைக்கண், வினைகெடல் ஓம்பல்; வினைக்குறை

     தீர்ந்தாரின், தீர்ந்தன்(று) உலகு

     அரைகுறையாய்ச் செயல்கள் செய்யாதே;

       செய்தால், உலகமும் கைவிடும்.

  1. தாள்ஆண்மை என்னும், தகைமைக்கண் தங்கிற்றே,

     வேள்ஆண்மை என்னும், செருக்கு.

      உதவி மேலாண்மைப் பெருமிதம்,

        முயற்சி மேலாண்மையால் வரும்.

  1. தாள்ஆண்மை இல்லாதான், வேள்ஆண்மை, பேடிகை

      வாள்ஆண்மை போலக், கெடும்.

 முயற்சி மேலாண்மைஇலான், உதவி

        மேலாண்மை, பேடியின் கைவாள். 

615. இன்பம் விழையான், வினைவிழைவான், தன்கேளிர்

      துன்பம், துடைத்(து)ஊன்றும் தூண்.

 இன்பம் விரும்பான், செயல்முடிப்பான்,

        துன்பச் சுற்றத்தாரைத் தாங்குதூண்.

  1. முயற்சி, திருவினை ஆக்கும்; முயற்[று]இன்மை,

     இன்மை புகுத்தி விடும்.

     முயற்சி செல்வத்தை ஆக்கும்.

       முயலாமை வறுமைக்குள் முடக்கும்.

  1. மடிஉளாள், மாமுகடி என்ப; மடிஇலான்

     தாள்உளாள், தாமரையி னாள்.

      சோம்புவான் மடியில், மூதேவி;

        சோம்பாதான் முயற்சியில், சீதேவி.

  1. பொறிஇன்மை, யார்க்கும் பழிஅன்(று); அறி(வு)அறிந்த

     ஆள்வினை இன்மை, பழி.

     உறுப்புக்குறை, பழிஇல்லை; அறிவது

        ஆய்ந்து, முயலாமை பழி.

  1. தெய்வத்தான் ஆகா(து) எனினும், முயற்சி,தன்

      மெய்வருத்தக், கூலி தரும்.

 ‘தெய்வத்தால், முடியாது’ எனினும்,

        முயற்சி தகுகூலியைத் தரும்.

  1. ஊழையும், உப்பக்கம் காண்பர், உலை(வு)இன்றித்,

      தாழா(து), உஞற்று பவர்.

 மனம்தளராது உழைப்பார், இயற்கைத்

       தடைகளையும் வெற்றி காண்பார்.