– சுப.வீரபாண்டியன்

ஆயிரம் மொழிகளைக் கற்றுக் கொள்ளுங்கள். ஆனால், தாய் மொழியை மறந்துவிடாதீர்கள்!

எந்த நாட்டில் வேண்டுமானாலும் வாழுங்கள்.. ஆனால், சொந்த நாட்டை மறந்து விடாதீர்கள்!

மூத்தவர்களுக்கு ஒரு வேண்டுகோள்! குறைந்தது திருக்குறளையாவது பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். திருக்குறள் படித்தால் வேலை கிடைக்குமா என்று கேட்டால், கிடைக்காது என்பதுதான் உண்மை. ஆனால்,திருக்குறள் படித்தால், கிடைத்த வேலை நிலைக்கும். புதிய உறவுகள் கிளைக்கும். வாழ்வு செழிக்கும். காரணம், திருக்குறள் என்பது ஒரு வாழ்வியல் நூல். எந்த மண்ணிலும், எந்த மொழி பேசும் மக்களோடும் எப்படிச்  சேர்ந்து வாழ்வது என்பதையும் எப்படிச் சிறந்து வாழ்வது என்பதையும் திருக்குறள் நம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும்.

– கருஞ்சட்டைத் தமிழர் நாள் அக். 16-31. 2013