பரிமேலழகரின் ஆரியத்திணிப்புகள் : thalaippu_parimelazhagarinaariyam_nedunchezhiyan

பல்துறைப் புலவர்

பரிமேலழகரின் ஆரியத் திணிப்புகள்

  என்றாலும், மதியின் கண் மறு இருப்பது போல, பரிமேலழகரின் வடமொழி நூலாரின் கொள்கைப் பற்றும், வைணவச் சமயம் பற்றும், வருணாச்சிரம சனாதன தருமப் பற்றும் சார்ந்த கருத்துகள், வள்ளுவர் வற்புறுத்திய சான்றோர் மரபுகளுக்கும் பொது அறத்திற்கும் முரண்பாடான முறையில், அவரால், உரையின் சிற்சில பகுதிகளில், வேண்டுமென்றே திணிக்கப்பட்டிருக்கின்ற என்பது மட்டும் உண்மை.

  மேற்கண்ட காரணம் பற்றித்தான் பேராசிரியர் மனோன்மணியம் சுந்தம்(பிள்ளை) அவர்கள், “வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர‘ வேண்டும் என்று வலியுறுத்தினார்: அவர் குறிப்பிட்டுள்ள மறு என்பது, பரிமேலழகர் தம் உரையில் புகுத்தியுள்ள, எவராலும் ஒப்புக்கொள்ள இயலாத, வடலூலாரின் சில கொள்கையைப் பற்றியதாகும். பரிமேலழகரால் புகுத்தப்பட்ட மாசுவும், மறுவும் அறவே நீக்கப்பட வேண்டும் என்பதுதான் பேராசிரியர் சுந்தரம் (பிள்ளை) அவர்களின் பேரவாவாகும்.

– நாவலர் இரா.நெடுஞ்செழியன்:

திருக்குறள் தெளிவுரை: முன்னுரை