பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 1 – 5: தி.வே.விசயலட்சுமி
பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி!
- பொய்தீர் ஒழுக்க நெறிபுகன்ற வள்ளுவனார்
செய்தார் குறள்நூல் செறிந்து.
- குற்றமிலா வாழ்நெறியைக் கூறும் குறள்நூலைப்
பற்றியே வாழ்வோம் பணிந்து.
- எம்மொழிக்கும் இல்லாத ஏற்றமிகு இன்குறளால்
செம்மொழிக்குச் சேரும் சிறப்பு.
- வேதத்தின் வித்தாய் விளங்கும் குறளமுதின்
நீதியை நெஞ்சே நினை.
- வள்ளுவர் உண்மையை விள்ளுவர் பொய்ம்மையைத்
தள்ளுவர் சீர்அள் ளுவர்.
-புலவர் தி.வே.விசயலட்சுமி
Leave a Reply