தலைப்பு- குறளுக்கும் மனுவுக்கும் வேறுபாடு-க.த.திருநாவுக்கரசு :thalaippu_manu_kural_vearupaadugal_thirunavukkarasu

மனுநூலுக்கும் குறள் நூலுக்கும் அடிப்படை

வேறுபாடுகள் நிறைய உள்ளன

“தனது உயிரைக் காக்கவும் தன்னைச் சார்ந்தவர்கள் உயிரைக் காக்கவும் வன்முறைச் செயல்களில் ஒருவன் ஈடுபடலாம்” (8: 347350) எனவும், மூன்று நாள்கள் பட்டினி கிடப்பவன் மறுநாளைக்கும் அதே நிலைதான் என்பதை அறிந்தால், அவன் திருடலாம்” (11:16) எனவும் மனுஉரிமை அளிக்கின்றார். ஆனால், திருவள்ளுவரோ, “தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல்?’ என வினவுவதோடு நிற்காமல், “ஈன்றாள் பசி காண்பான் ஆயினும்செய்யற்க. சான்றோர் பழிக்கும் வினை’ என அறிவுறுத்துகின்றார். இத்தகைய அடிப்படைக் கொள்கை வேறுபாடுகள் திருக்குறளுக்கும் மனுதரும சாத்திரத்திற்கும் இடையே நிறைய உள்ளன.

திருக்குறள் மணி க.த.திருநாவுக்கரசு:

திருக்குறளும் இந்திய அறநூல்களும்: பக்கம்.60