தலைப்பு-காதல்வாழ்வு : thalaippu_kathalvaazhvu_ilakkiyam

       காதல் என்பது நாகரிகப் பண்பாட்டின் அளவு தெரிவிக்கும் உரைகல் என்றும் உரைக்கலாகும். சாதி மத நிலை வேறுபாடற்ற மக்களின் வாழ்வின் நிலைக்களமும், ஆண் பெண் சமத்துவ உரிமைப் பண்பும் காதலே. அக்காதல் வாழ்வே இலக்கியத் தோற்றத்திற்கு உரிய விளை நிலமாதலின் அது பற்றி இலக்கியத்தில் கூறும் மரபுகளைத் தொகுத்துரைப்பதே அகத்திணையியலாகும்.

செந்தமிழ்மாமணி முனைவர் சி.இலக்குவனார் :

தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 129-130