திராவிடம் என்பது பிந்தையது – பேரா.சி.இலக்குவனார்
தமிழ் என்னும் சொல் தோன்றிய காலத்தது;
திராவிடம் என்பது பிந்தையது.
இந்திய மொழிகளை ஆரியக் குடும்ப மொழிகள் என்றும் தமிழ்க் குடும்ப மொழிகள் என்றும் இருவேறு இனமாகப் பிரித்துள்ளனர் மொழியாராய்ச்சியாளர்கள்.
தமிழ்க்குடும்ப மொழிகளைத் திராவிடக் குடும்ப மொழிகள் என்பர்.
திராவிடம் என்ற சொல்லிலிருந்தே தமிழ் என்ற சொல் தோன்றியது என்ற கருத்து பிழைபட்டது என்று நிலைநாட்டப்பட்டுவிட்டது.
கி.மு. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னர் இயற்றப்பட்ட தொல்காப்பியத்தில் தமிழ் எனும் சொல் பயின்றுள்ளது. திராவிடம் என்ற சொல்லின் தோற்றம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிந்தியது.
தொல்காப்பிய அறிஞர் முனைவர் சி.இலக்குவனார்
தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 279
//கி.மு. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னர் இயற்றப்பட்ட தொல்காப்பியத்தில் தமிழ் எனும் சொல் பயின்றுள்ளது. திராவிடம் என்ற சொல்லின் தோற்றம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிந்தியது// – நினைவில் கொள்ள வேண்டிய தகவல்.