வரலாற்றுச் சிறப்பு தமிழினத்திற்கே உண்டு – மு.கருணாநிதி
வரலாற்றுச் சிறப்பு தமிழினத்திற்கே உண்டு
உலகில் பல பகுதிகளில் உருவான இனங்கள் மொழிச் சாதனத்தைப் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கின எனினும்; அவற்றில் மொழியில் இலக்கியம் கண்டு, அதற்கு இலக்கணமும் கண்டு, ஐயாயிரம் ஆண்டுக்கு முன்பே தொடங்கிய வளர்ச்சிக்கு இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னரே மெருகேற்றிக் கொண்ட பெருமையும் வரலாற்றுச் சிறப்பும் தமிழ் இனத்துக்கே உண்டு. அதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவதே தொல்காப்பியத்தின் பொருளதிகாரமாகும். இதில் சொல்லப்பட்டிருக்கும் பழங்கால வாழ்க்கை முறைக்குறிப்புகள், ஒழுக்கம் பற்றிய பல செய்திகள், தொல்காப்பியத்திற்கு முன்பே தமிழ் நிலத்தில் நடைமுறையில் இருந்தன. எனினும் அவற்றையும் செப்பனிட்டுச் சேர்த்து தம் காலத்து வாழ்க்கை முறை நிலைமைகளையும் தொல்காப்பியர் தொகுத்து, இலக்கிய மணம் வீசும் இலக்கணப் பூங்கொத்தாக வழங்கியிருக்கிறார் என்பதுதான் நம்மைப் பெருமிதம் கொள்ளச் செய்வதாகும்… தொல்காப்பியம் போன்ற நூல்கள் இவையேல் நாம் காலக் கண்ணாடிகளை இழந்தவர்களாகயிருப்போம்.
– கலைஞர் மு.கருணாநிதி: தொல்காப்பியப் பூங்கா: பக்கம். 134-135
Leave a Reply