tholkappiya aaraaychi mun attai

  தொல்காப்பிய ஆராய்ச்சி என்ற இந்நூலில் பரவிக்கிடக்கும் இலக்குவனாரின் கருத்துகளில் சில:

  1. ஆரியம்தான் தமிழை நோக்கித் தன் எழுத்தமைப்பை ஆக்கிக் கொண்டிருக்கவேண்டுமேயன்றி, தமிழ், ஆரியத்தை நோக்கி அமைத்துக் கொண்டது அன்று. (இலக்குவனார் 1971:44).
  2. இந்திய மொழிகளின் வரிவடிவ எழுத்துகளின் தாய் தமிழ் நெடுங்கணக்கின் வரிவடிவமே எனில் மிகையாகாது. (இலக்குவனார் 1971:45).
  3. மேலைநாட்டு ஆராய்ச்சியாளர்கள் எழுத்துகளின் பிறப்புபற்றிக் கூறும் கருத்துகள் தொல்காப்பியர் கூறும் கருத்துக்களோடு ஒற்றுமையுடையனவாக இருக்கின்றன. (இலக்குவனார் 1971:65).
  4. தொல்காப்பியப் பொருட்படலம் இலக்கியம் விளக்கும் இலக்கணமாகும்(science of Literature) என்பதை அறிந்து போற்றிப் பயில்வோமாக. (இலக்குவனார் 1971:274).
  5. எழுத்தாளராகவும் புலவராகவும் விரும்புவோர் தொல்காப்பியத்தையும் சங்க இலக்கியங்களையும் பிற இலக்கியங்களையும் நன்கு கற்றல் வேண்டும். (இலக்குவனார் 1971:283).

எழுத்தாளராகவும் கவிஞராகவும் விரும்புவோர் தமிழறியாத நிலையே இன்றுள்ளது என்பதை நினைக்கும்பொழுது, அன்று அவர் கூறிய இன்று தமிழ்நாட்டில் இலக்கிய வறுமை இனிதே ஆட்சிபுரிகின்றது என்ற கருத்து என்று மாறும் என்ற ஏக்கம் நம்முள் பிறக்கின்றது.

தமிழ் ஆய்வாளர்களும் தமிழறிய விரும்புவோரும் தெரிந்துகொள்ள வேண்டிய நூல் இது. கற்றுப் பயன்பெறுக.