(இணைய வழி) பன்னாட்டுத் தமிழ்ப் பேச்சுப் போட்டி
தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
வணக்கம் மலேசியா
சப்பான் தமிழ்ச் சங்கம்
(இணைய வழி) பன்னாட்டுத் தமிழ்ப் பேச்சுப் போட்டி
காணொளி அனுப்ப இறுதி நாள் : 28-12-2022 (புதன்)
அனைவருக்கும் வணக்கம்!
இணைய வழியாக நடைபெறும் மாபெரும் பன்னாட்டுத் தமிழ்ப் பேச்சுப் போட்டியில் பங்கெடுக்க விரும்புகிறீர்களா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!
‘ வணக்கம் மலேசியா ‘ நடத்தும் இந்த உலகளாவிய முழக்கத்தில் சப்பான் தமிழ்ச் சங்கமும் ஒரு குரலாய்ப் பங்கெடுப்பதில் பேருவகை கொள்கின்றது!
மாணவர் முழக்கம் – 10 வயது முதல் 13 வயதிற்கானது(ஆரம்பப்பள்ளி மாணவர்கள்)
தலைப்பு – அடிப்படைத் தேர்வுச்சுற்று:
1. சோம்பலை விடு
2. தமிழா ஒன்றுபடு
3. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
பேசு தமிழா பேசு – 18 வயது முதல் 35 வயதிற்கானது (பல்கலைக்கழக/கல்லூரி மாணவர்கள்)
தலைப்பு – அடிப்படைத் தேர்வுச்சுற்று:
1. நிலாவிலும் நிலம் வாங்கலாம்
2. நரையும் அழகே
3. வானத்தை வசமாக்கும் தமிழர்கள்
விதிமுறைகள்:
கொடுக்கப்பட்ட தலைப்புகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து போட்டியாளர்கள் அதிகபட்சம் 2 நிமிடத்திற்குள் பேசி காணொளி ஒன்றைப் பதிவு செய்து அனுப்பி வைக்க வேண்டும்.
மாணவர்களின் காணொளிகள் கீழ்க்காணும் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும்.
– உச்சரிப்பு
– எழுத்துப் படிவம்
– மொழி நடை
– குரல் வளம்
– படைப்பு / பேச்சு ஆளுமை
– கருத்து
அடிப்படைத் தேர்வுச்சுற்றில் தகுதி பெறுபவர்கள் காலிறுதிச்சுற்றில் (28-01-2023, 29-01-2023) பங்கேற்பார்கள். பிறகு அரையிறுதி(10-02-2023, 11-02-2023) மற்றும் இறுதிச்சுற்றுகள்(04-03-2023) நடைபெறும்.
பங்கெடுக்க விருப்பமுள்ள மாணவர்கள் அடிப்படைச் சுற்றுக்காகப் பதிவு செய்யப்பட்டக் காணொளியைக் கீழ்க்காணும் மின்னஞ்சல்/தொலைபேசியில் அனுப்பி வைக்கவும். ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் மின்னஞ்சல்/தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
ஒருங்கிணைப்பாளர் பெயர் :
பிரசன்னா, கலைச்செல்வன்
தொலைப்பேசி எண் :
+818040992094
+818058640211
மின்னஞ்சல் முகவரி :
contact
japantamilsangam@gmail.com
kalaiselvam.p@gmail.com
Spprasu@gmail.com
காணொளி அனுப்ப கடைசி நாள் : 28-12-2022 (புதன்)
நன்றி
இங்ஙனம்
சப்பான் தமிழ்ச்சங்கம்
Leave a Reply