ஒரு கையில் ஓசை எழுப்பும் மாணாக்கியர் சௌசன்யா
ஆந்திர மாநிலம் நிசாமாபத்தில் சௌசன்யா என்னும் பொறியியல் மாணாக்கி, ஒரு கை ஓசை எழுப்பி கின்னசு அருவினையேட்டில் இடம்பெற விரும்புகிறார்.
நிசாமாபாத்து நகரில், சூரியநகர் பகுதியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி ஒன்றில்,இளம்தொழில்நுட்பவியல்(பி.டெக்.) படித்து வருபவர் பாப்பா சவுசன்யா(Pabba Soujanya)இவர், தன் கையைத் தானே, உள் நோக்கி மடக்கி, கையின் உட்புறத்தில் தட்டி, ஓசையை எழுப்புகிறார். திசம்பர் 25 அன்று, தீட்சப்பள்ளியில்(Dichpally) அலுவலர்கள் முன்னிலையில் இவர், தன் அருவினையை நிகழ்த்திக்காட்டினார். அப்பொழுது 4 நிமையம் 56 நொடிகளில் 1,150 தடவைகள் ஒற்றைக்கையால் தட்டி ஒலி எழுப்பினார். இதை, நிமையத்திற்கு, 360 தடவைகளாக உயர்த்தி கின்னசு அருவினையேட்டில் இடம் பெற வேண்டும் என இலக்ககைக் கொண்டுள்ளார்.
மாவட்ட அலுவலர்கள் இவர் பெயரைக் கின்னசு அருவினையேட்டில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.
‘ஒரு கை ஓசை எழுப்பாது’ என்னும் பழமொழியை மாற்ற வேண்டுமோ?
Leave a Reply