செய்திக்குறிப்புகள் சில
வேளாண்மைத் துறை சார்பில் உரூ.162.50 கோடி செலவில் திட்டங்கள்:
முதல்வர் செயலலிதா தொடங்கி வைத்தார்
உரூ.12.81 கோடி செலவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், புதிய கட்டடங்களை
முதல்வர் செயலலிதா திறந்து வைத்தார்.
உ.வே.சாமிநாத ஐயர் அவர்களின் 159 ஆவது பிறந்த நாளில் உலகத் தமிழ்ச்சங்கம் மதுரையின் சார்பில் அதன் தனி அலுவலர்(பொ) முனைவர் க. பசும்பொன் அவர்கள் தல்லாகுளம் அருகில் உள்ள உ.வே.சாமிநாத(ஐய)ர் அவர்களின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து வணக்கம் தெரிவித்தார்கள்.
மொகாலி: பஞ்சாப் மாநில வேளாண் மாநாட்டின், கண்காட்சியில் பங்கேற்ற உழவர் கபூர்தலா மாவட்டத்தை சேர்ந்த, இலம்பர்தார் சோமல் என்பவரின் எருமைக்கு, 10 கோடி உரூபாய் வரை பணம் கொடுப்பதாக வெளிநாட்டினர் ஒருவர் கூறியும், அந்த எருமையின் உரிமையாளர் விற்க மறுத்துவிட்டார். 5 அடி, 8 அங்குல உயரமும், 11 அடி நீளமும் 1,200அயிரைக்கல்(கிலோ) எடையும் உடையது இந்த எருமை.
இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீசு வங்கி சார்பில், சென்னையில், 30 இடங்களில், தானியங்கி நாணயம் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

சென்னைக் கடற்கரையில் குப்பை அகற்றும் பணியில், மாநகராட்சித் துப்புரவு ஊழியர்களுடன், மாநிலக் கல்லூரி, நந்தனம் கலைக்கல்லூரி, பச்சையப்பன்,இலயோலா, எத்திராசு, வைணவா, குருநானக் கல்லூரிகளைச் சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஈடுபட்டனர்.
அணுசக்திக்குத் தேவையான விண்ணிமம்(யுரேனியம்) வகையைச் சேர்ந்த இயாந்தினைட்டுக் கனிமம் ஆந்திராவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது

அம்மா உணவகத்தின் பெரும் வரவேற்பைத் தொடர்ந்து அடுத்ததாக வரவிருக்கிறது ‘அம்மா திரையரங்கம்’.
சிங்கப்பூரில் கலவரம் ஏற்பட்ட சிற்றிந்தியாவில் பொது ஒழுங்கு- அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல்துறையினருக்கு இசைவு அளிக்கும் வகையில் அந்நாட்டில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
முருகனும், நளினியும் இலண்டனில் வசிக்க முடிவு
5 ஆண்டுகளில் 335 நாட்கள் மட்டுமே நடந்தது 15 ஆவது நாடாளுமன்றம்.











Leave a Reply