குரு அழைத்ததால் இணைந்தேன் என்று  அறிவி்ப்பு

t.rajenthar01
இலட்சிய திமுக தலைவர்  விசய டி.இராசேந்தர் 27.12013 மாலை 6 மணி அளவில் தன் மனைவி உசாவுடன் சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி இல்லத்துக்கு வந்தார்; கருணாநிதியைச் சந்தித்து  ஏறத்தாழ 1 மணிநேரம்பேசினார்.

பின்னர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளிடம் உடல்நலம்  உசாவிவிட்டு இரவு 7 மணி அளவில் கருணாநிதி இல்லத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது விசய டி.இராசேந்தர் கண்ணீர் மல்கச் செய்தியாளர்களிடம், ஆர்க்காடு விராசாமி  தலைவர் பார்க்கவேண்டுமென்று கூறி இங்கு அழைத்து வந்ததாகவும் தலைவர் மனம் விட்டுப்பேசித் தன்னுடன் இருக்க வேண்டுமென்று ஒரே ஒரு கட்டளை, ஒரேயோர் அன்பு விருப்பம் தெரிவித்து, அவரே எழுதிய அறிக்கையைத் தந்ததாகவும்  அதனால் தி.மு.க.வில் இணைந்ததாகவும் கூறினார்.

தமிழக மீனவர் நலனுக்காகவும் ஈழத்தமிழர் நலனுக்காகவும் முன்பு தாம் வகித்து வந்த சிறுசேமிப்பு வாரியத் துணைத் தலைவர் பதவியைத் துறந்த டி.இராசேந்தர் தமிழ் உணர்வாளர் என்பதில் ஐயமில்லை.  ஆனால்  மக்கள், அவரது அடுக்குநடையைக் கேட்டாலும் தேர்தலில்  புறக்கணிக்கையில் என்னதான் செய்வார் பாவம்?