(தோழர் தியாகு எழுதுகிறார் 235 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 11 தொடர்ச்சி)

மணிப்பூர்க் கோப்புகள்

(MANIPUR FILES) 

கதை (12)

என் பெயர் நான்சி தௌத்தாங்கு. அகவை 34. குக்கி இனப்பெண். நால்வரடங்கிய எங்கள் குடும்பம் வன்முறை வெறியாட்டத்தில் தப்பிப் பிழைத்து காங்குபோக்குபியில் ஒரு துயர்தணிப்பு முகாமில் தஞ்சடைந்துள்ளது. மணிப்பூர் மாநிலமெங்கும் இது போன்ற பல ஏதிலியர் முகாம்கள் இருப்பதாக அறிகிறோம்.

இம்பாலிலிருந்து தப்பி இந்த முகாமுக்கு வரும் போது எங்கள் உடைமைகளில் மிகச் சிலவற்றை மட்டுமே எடுத்து வர முடிந்தது. நானும் என் கணவரும் வாழும் வழி இழந்து தவிக்கிறோம். ஆனால் தப்பி வராமல் சிக்கியிருந்தால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிக் கொல்லப்பட்டிருப்பேன். எங்கள் இல்லம் முதலமைச்சரின் தொகுதியில் உள்ளது. அங்கிருந்து வெளியேறி வரவேண்டியதாயிற்று என்பதை இப்போதும் நம்ப முடியவில்லை.

பின்கதை: மே 28ஆம் நாளிலிருந்து சூரசந்துபூர் துயர்தணிப்பு முகாமில் தங்கியிருக்கும் கிரேசு நிங்கொம்பம் என்ற குக்கியினப் பெண்ணால் தன் துயரத்தை எடுத்துச் சொல்லக்கூட முடியவில்லை. “இளையோரும் முதியோருமான இந்தப் பெண்களைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் உடலும் மனமும் நடுங்குகின்றன” என்கிறார் கிரேசு.

(
தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 266