மாணிக்கவாசகம்பள்ளி, திருமுருகாற்றுப்படை, போட்டி, பாராட்டு ; manickavasakampalli_thirumurukaarrtupadai-parisu

மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி : 

திருமுருகாற்றுப்படை ஒப்பித்தல் போட்டி :

மாணவர்களுக்குப் பாராட்டு

   தேவகோட்டை: சௌபாக்கிய துருக்கை அம்மன் கோவிலில் நடைபெற்ற திருமுருகாற்றுப்படை ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பெருந்தலைவர் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் பாராட்டு விழா  நடைபெற்றது.

விழாவிற்கு வந்தவர்களை  வாசுகி வரவேற்றார்.

பள்ளித் தலைமை ஆசிரியர்  இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

பரிசு பெற்ற மாணவர்களான திவ்விய பாரதி, அசய், பிரசித்து, கனிட்கா, முத்தையன், திவ்வியசிரீ, சத்தியா, அம்முசிரீ.மகாலெட்சுமி, அசய் பிரகாசு, பாக்கியலெட்சுமி, நந்தகுமார், இராசேசு, உமா மகேசுவரி, இராசேசுவரி, கார்த்திகா, தனலெட்சுமி ஆகியோருக்கும், பயற்சிஅளித்த ஆசிரிய, ஆசிரியைகளுக்கும்  பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பள்ளி விடுமுறை நாளன்று நடைபெற்ற இப்போட்டிக்கு  – பெற்றோர்கள் கூலி வேலை பார்ப்பதால் அவர்களால்  போட்டிக்கு அழைத்து செல்ல முடியாத சூழ்நிலையில் –  பள்ளி  ஆசிரியை வாசுகி மாணவர்களைப் போட்டிக்கு அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

நிறைவாக ஆசிரியை சாந்தி  நன்றி கூறினார்.