விழியிடையில் வழிநடை தவறினேன்! – ஆற்காடு க.குமரன்
குழைந்து கிடக்கும் இடையில்
மறைந்து கிடக்கும் மடிப்பில்
புதைந்து கிடக்கிறேன் நான்
மூச்சு முட்டுதடி
பேச்சு கெட்டதடி
உச்சு கொட்டுதடி
உள்வாங்கியவுன்னழகு
காற்று வீசூதடி
கண்ணில் தெரியுதடி
சேலை விலகியே
தேவை கூறுதடி
கைப்பிடி நழுவி
கவிழ்த்தேன்
கைப்பிடியிடையாலே
கைப்பாவையானேன் நான்
குடம் சுமந்ததை
குழவி சுமந்ததை
என் மனம் சுமந்ததை
அறியாயோ
இரவு உடையில்
குருடாகும் விழிகள்
மூடி மறைத்ததால்
முறைக்குதடி காற்று
சேலை செய்யும் சேவை
காற்றால் திரைச்சீலை
கண்கள் தீரும் தேவை
காட்சிப் பொருளல்ல கற்சிலை அல்ல
காண்போரை
கற்சிலையாக்கும்
பொற்சிலை
பின்னில் சாளரம்
முன்னில் கோபுரம்
உச்சியில் சாமரம்
மண்ணிலே தேவதை
‘இரவிக்கை’யில் வைத்த சன்னலில்
தோன்றாத மின்னல் இடையினில்
காற்றுதவ
கைதட்டி அழைக்குதடி
காணத் துடிக்குதடி
கவ்விட விழையுதடி
அழகு நிலை இல்லை
காலம் நிலை இல்லை
நொடிப்பொழுது மின்னல்
ஆயுள் முழுதும் தங்கி
அடிக்கடி மின்னி
நொடிக்கொரு முறை
வெளிச்சக் கீற்று
வெறிக்கிறேன் பார்த்து
இடையிடையில்
விழியிடையில்
வழிநடை தவறி
சுழிதனில் விழுந்தேன்
சுனைதனில் மிதந்தேன்
சுயம்தனையிழந்தேன்
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114
Leave a Reply