(வெருளி நோய்கள் 1141-1145: தொடர்ச்சி)

சேகா நிறுவனத்தின் காணாட்டம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சேகா காணாட்ட வெருளி.

சேகா என்பது சப்பானின் தோக்கியாவில் உள்ள சினகாவா(Shinagawa) நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பன்னாட்டுக் காணாட்ட நிறுவனமாகும்.
Service Games என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கமே சேகா (Se Ga)என்பது.
00

சேடன் மகிழுந்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சேடன் வெருளி.
உட்கார் என்னும் பொருள் காெண்ட “sedere” என்னும் இலத்தீன் சொல்லில் இருற்து உருவானதே “sedan”. அமர்ந்து செல்வதற்கு வசதியானது என்பதை உணர்த்தும் வகையில் இம்மகிழ்வுந்து உருவாக்கப்பட்டது.
00

சேண்மக் கோள் (Neptune) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சேண்மக் கோள் வெருளி.
கோள்கள் வெருளி(Planitiphobia) உள்ளவர்களுக்குச் சேண்மம் குறித்த வெருளி வருகிறது.
00

சேண்மியம்(Pluto) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சேண்மிய வெருளி.
கோள்கள் வெருளி(Planitiphobia) உள்ளவர்களுக்குக் குறுங்கோளான (குறுமி) சேணாகம் குறித்த வெருளி வருகிறது.
00