இணையத்தில் ஏமாந்துவிடாதீர்கள் உறவுகளே!

இணைய வழித் தொடர்புகள்

அடிக்கடி வந்து சேரும்

அதில் வந்துள்ள மடல்களில்

தன்னைக் கட்டு,

தன் பிள்ளையைக் கட்டு,

அழகான அக்காவைக் கட்டு,

தங்கச்சியைக் கட்டு

என்றவாறு விண்ணப்பங்கள் பல…

ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு

என்று எனக்கும் மனைவி இருக்கென்றேன்!

மனைவிக்கும் இவற்றைக் காட்டி

கதைத்துச் சிரித்து மகிழ்வேன்…

இணையத்தில் இப்படிப் பல

உங்களுக்கும் வந்து சேரும்

ஒருபோதும் நம்பிவிடாதீர்கள்…

அப்பிள் திறன்பேசி,

அப்பிள் மடிக்கணினி

அனுப்புவதாக ஒருத்தி

கனடா விமான ஓட்டியாம்

மனைவியும் உடன்பட்டாள்

நானும் அனுப்பு என்றேன்…

அனுப்புகிற செலவாக

600டொலர் அனுப்பச் சொன்னால்…

600டொலருக்கு

நான் எங்கே போவேன்?

மனைவியைத் தான் கேட்டேன்

“என்னைத் தேவை என்றாள்

இணையவழித் தொடர்பை முறி!”

என்று கன்னத்தில் அறைந்தாளே!

அனுப்புகிற செலவு என்று

பணம் பறிக்கும் கும்பல்

இணையத்தில் இப்படி உலாவலாம்

ஏமாந்துவிடாதீர்கள் உறவுகளே!

– காசி சீவலிங்கம் யாழ்ப்பாவாணன்