(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம்

14/ 69  இன் தொடர்ச்சி)

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

15/ 69

பாரதி ஆறு பாரதிதாசன் பத்து (2004)

பாரதியார்பற்றிய 6 கட்டுரைகளும் பாரதிதாசன்பற்றிய 10 கட்டுரைகளும் அடங்கிய தொகுப்பு நூல் இது.

பாரதிபற்றிய ஆறு கட்டுரைகள் வருமாறு:-

1.) தமிழ் மரபு,மேலை இலக்கியம்,தனித்துவம்:பாரதியின் படைப்புகள் 2.) கவிதையில் காளி : விவேகானந்தரும் பாரதியும் 3.) பாரதி, அரவிந்தர், தாகூர்: ஓர் ஒப்பிலக்கிய மறு பார்வை 4.) “மூடக்காட்சிகள் யாவும் தகர்ப்போம்”:பாரதியின் புதுமைப்பெண் 5.)”சிவம் நான்”: பாரதியின் பாடல்களில் தத்துவமும் கவிதையும் 6.) உண்மையைத் தேடி விண்வெளிப் பயணங்கள்: பாரதியின் ஞானரதம்

இவை பாரதியின் பாடல்களையும் கட்டுரைகளையும் ஆய்வு செய்கின்றன.

இரண்டாம் பகுதியில் உள்ள பாரதிதாசன்பற்றிய பத்துக் கட்டுரைகள் வருமாறு:-

”பனிமலர் ஏறிய தேன்” : பாரதிதாசனின் படைப்புகளில் கோட்பாடு 2.) “இரணியாய நம” : கம்பனும் பாரதிதாசனும் 3.) தொன்ம மீட்டுருவாக்கம் : பாரதிதாசனும் செல்லியும் 4.) பெண்ணின் பெருமை : பாரதிதாசனும் ஏட்சும் 5.) “நட்ட கல்லும் பேசுமோ” : பாரதிதாசனும் இலேட்டனும் 6.) “உலகம் ஒன்றெனும் தாயுள்ளம்” : பாரதிதசானின் பொதுவுடைமைத் தத்துவம் 7.) திராவிட இனத்தின் இடிக்குரல்: பாரதிதாசனின் கவிதையில் வடக்கும் தெற்கும் 8.) மனித உரிமைகளுக்காக : பாரதிதாசனும் ஆடனும் 9.) இயற்கை,உயிரினம், சுற்றுச்சூழல் : பாரதிதாசனும் தாகூரும் 10.) பொன்னான தமிழ்ப்பேழை: ஆங்கிலத்தில் பாண்டியன் பரிசு.

பாரதி பதினாறு (2014)

மாபெரும் தமிழ்க்கவிஞரான பாரதியின் படைப்புகளைப் பல கோணங்களிலிருந்து பார்க்கும் 16 கடடுரைகளின் தொகுப்பு இந்நூல். தமிழ்க்கவிதைகளை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லும் இவரது முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும்.

முன்னுரையைத் தொடர்ந்து 1.வாழையடி வாழை: வள்ளலாரும் பாரதியும், 2. பாரதியின் கவிதை உருவாக்கம்: மேலைக் கவிஞர்கள், 3. பாரதியின் கட்டுரை: மேலைக் கல்வியாளர்கள், 4. கவிதையில் காளி: விவேகானந்தரும் பாரதியும், 5. பாரதி, அரவிந்தர், தாகூர்: ஓர் ஒப்பிலக்கிய மறுபார்வை, 6. ‘சிவம் நான்’ : பாரதி பாடல்களில் தத்துவமும் கவிதையும், 7. மூடக்கட்டுகள் யாவும் தகர்ப்போம், 8. பாரதியின் ‘அக்கினிக் குஞ்சு’, 9. நாட்டுப்பண் :  பாரதி, தாகூர், பங்கிம் சந்திரர், 10. பாரதியின் கவிதையியல், 11. சிற்பியின் சிறையில் மகாகவி, 12. எது பாரதி மரபு? 13. பாரதி சொல்லும் பகவத்து கீதை, 14. உண்மையைத்தேடி, விண்வெளிப் பயணங்கள் : பாரதியின் ஞானரதம், 15. கவிஞன் ஓர் இளைஞனாக: பாரதியின் சின்ன சங்கரன் கதை, 16.வருவது உணர்த்திய பாரதி என்னும் தலைப்புகளில் பிற ஆன்றோர்களுடனான ஒப்புமைக் கருத்துகளையும் ஆய்வுரைகளையும் நமக்கு ஆசிரியர் வழங்கியுள்ளார்.

செல்லியின் கவிதைகளில் ஈடுபாடு கொண்டிருந்த பாரதி, அவர்போல் அறிவியல் நுட்பங்களைச் சொல்லும் கவிதைகளையும் படைத்துள்ளார் என எடுத்துக் காட்டுகளுடன் இறுதிக் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பார்.

பாரதியார்பற்றிய நூல்களும் கட்டுரைகளும் மிகுதியாக வந்துகொண்டே உள்ளன. எனினும் அவரது படைப்புகளில் காணப்பட வேண்டிய புத்தொளியையும் படிநிலைகளையும் எடுத்துரைப்பதை இலக்காகக் கொண்டு இந்நூலைப் படைத்துள்ளார். பாரதியாரைப்பற்றிய முழுமையான சிறப்பை எடுத்துரைக்கும் நோக்கில் இக்கட்டுரைகள் மூலம் பேரா.ப.ம.நா.வெற்றி கண்டுள்ளார் எனலாம்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 16/ 69)