பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4   காட்சி : 3

(பன்னீர்செல்வத்தின்புதியபுரட்சிக்கவி: களம் : 4  காட்சி : 2 தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4   காட்சி : 3 அரண்மனையினொருபுறம், அல்லியும், பிற தோழியரும் அறுசீர் விருத்தம் குழலி  :                   அணங்கே                அல்லி           அறியாயோ                                       அரசன்           மகளை          உணராயோ                              இணங்கி                 நாமும்          ஏற்றிட்டோம்                                       இளையாள்              காவல்           பூண்டிட்டோம்                              சுணக்கம்                 அதிலே                   நேர்ந்ததுவோ                                       சூழ்ச்சி          முற்றும்                   அழிந்ததுவோ                              பிணக்கம்                 நம்மில்          வேண்டாது                                       பிழையைத்              தடுத்தல்               வேண்டுமன்றோ அல்லி  :         நமது                      காவல்          …

‘செந்தமிழ் வளர்த்த செம்மல்கள்-வ.உ.சி, பாரதி’ – பன்னாட்டுக் கருத்தரங்கம்

உலகத் தமிழ்ச் சங்கம் பன்னாட்டுக் கருத்தரங்கம்    உலகத் தமிழ்ச் சங்கம், மதுரையின் சார்பில் ‘செந்தமிழ் வளர்த்த செம்மல்கள்-வ.உ.சி, பாரதி’ என்ற இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம் புரட்டாசி 04-08, 2052 (20.09.2021 முதல் 24.09.2021 முடிய) ஐந்து நாள்கள்  இந்திய நேரம்: மாலை 4.00மணிக்கு அணுக்கச் செயலி வழியே நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கில் பங்கேற்க. . . பதிவுப்படிவம்https://tinyurl.com/2w8aw8a9இணைப்புhttps://tinyurl.com/25u64t9yகூட்ட அடையாள எண்:203 717 1676நுழைவுச்சொல்: wtsஅனைத்து அமர்வுகளிலும் பங்கேற்றுப் பின்னூட்டம் அளிப்பவர்களுக்கு  மின்சான்றிதழ் வழங்கப்படும். அனைவரும் வருக! அருந்தமிழ் பருக!

உலக அரங்கில் முழுமையாக எடுத்துச்செல்லப்பட வேண்டிய கவிஞர்கள் பாரதியும் பாரதிதாசனும்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 14/ 69  இன் தொடர்ச்சி)

பாவேந்தரும் பொதுவுடைமையும் 2/4 – முனைவர் நா.இளங்கோ

(பாவேந்தரும் பொதுவுடைமையும் 1/4  தொடர்ச்சி) பாவேந்தரும் பொதுவுடைமையும் 2/4     மானிடத்தின் மகத்துவம் பேசும் கவிஞன், சமத்துவத்தின் தேவையை, உயர்வைப் பேசும் கவிஞன், உழைக்கும் மக்களின் உன்னதத்தைப் பேசும் கவிஞன் என்பதோடு நில்லாமல், புதியதோர் உலகம் செய்வோம்- கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் பொதுவுடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம் புனிதமோடு அதை எங்கள் உயிரென்று காப்போம் என்று புதிய உலகம் அதுவும் பொதுவுடைமை உலகம் அமைக்க விரும்புகிறார் பாவேந்தர். மேலும் உலகப்பன் பாடலில் ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர் உதையப்பராகி விட்டால் ஓர் நொடிக்குள்…

பாரதிதாசனுக்கு மணிமண்டபம் வேண்டும் பாரதி – ஆரூர் தமிழ்நாடன்

பாரதிதாசனுக்கு மணிமண்டபம் வேண்டும் பாரதி “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” – என்று முரசறைந்தவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.  ஏப்பிரல் 29-இல் அவரது 127-ஆவது பிறந்தநாள் வருகிறது. இதைத்தொடர்ந்து, அவர் பிறந்த மாநிலமான புதுவையில், மாநில அரசு அவருக்கு மணிமண்டபம்  அமைக்கவேண்டும் என்றும், அவருக்கு மேலும் சிறப்புகளைச் சேர்க்கவேண்டும் என்றும் கோரிக்கைக்குரல், தமிழன்பர்கள் மத்தியில் வலுவாக எழுந்திருக்கிறது.   தமிழுக்கு வளமும் நலமும் சேர்த்தவர் கனக சுப்புரத்தினம் என்னும் இயற்பெயரைக் கொண்ட புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். மொழிப்பற்றையும் இனப்பற்றையும் தன் உணர்ச்சிமிகும்…

பாராட்டப்பட வேண்டிய வா.மு.சே. – வல்லிக்கண்ணன்

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன்   பாரதிக்குப் பிறகு தமிழில் கவிதை இலக்கியம் வளரவில்லை என்று சிலர் சொல்கிறார்கள். இது சரியான நோக்கு இல்லை.  பாரதிக்குப் பின் கவிதை வளர்ச்சி பற்றிப் பேசுகிறவர்கள் கூடப், பாரதிதாசன். கண்ணதாசன், பட்டுக் கோட்டை கலியாண சுந்தரம் என்ற ஒரு சில பெயர்களை மட்டுமே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதுவும் முழுமையான பார்வை ஆகாது.  பாரதிக்குப் பின்னரும் நல்ல கவிதை எழுதுகிறவர்கள் பலர் தோன்றியுள்ளனர். இப்போதும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஆயினும் அவர்களுடைய பெயர்கள் பரவலாகப் பேசப்படுவதில்லை. குறிப்பிட்டுச்…

தமிழுக்கு ஒளி தந்த தமிழ்ஒளி 1/4 – சி.சேதுராமன்

தமிழுக்கு ஒளி தந்த தமிழ்ஒளி 1/4     பாரதி, பாரதிதாசன் ஆகிய இருவரின் சுவடுகளைப் பற்றிக் கொண்டு ‘பாரதி கவிதா மண்டலத்தின்’ மூன்றாவது தலைமுறையில் முத்திரைப் பதித்த கவிஞர்தான் தமிழொளி. பாரதியையும், பாரதிதாசனையும் பலரும் பின்பற்றி அவர்களது சுவடுகளில் கால்பதித்து நடந்தாலும் அவர்களின் வழிநின்று பொதுவுடைமைக்குக் குரல் கொடுத்து இறுதிவரை பொதுவுடைமைவாதியாகவே வாழ்ந்து மறைந்தவர் கவிஞர் தமிழொளி.   தென்னார்க்காடு மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடியை அடுத்த ‘ஆடூரில்’ சின்னையா – செங்கேணி அம்மாள் இவர்களின் தலைமகனாக 1924-ஆம் ஆண்டு செட்டம்பர் திங்கள் 21-ஆம்…

மன அமைதிக்கு மருந்து நூல்களின் பங்கு: 1/ 2 : தி.வே.விசயலட்சுமி

மன அமைதிக்கு மருந்து – நூல்களின் பங்கு 1/ 2   “நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு”             (குறள் 783)   நூல்களைப் படிப்பவர்களுக்கு,    அதிலுள்ள நற்பொருள்கள் சிறுகச் சிறுக விளங்குவதுபோலப், பண்புள்ளவர்களுடன் செய்துகொள்ளும் நட்பு, அவருடன் பழகப்பழக இன்பம் அளிக்கும்.   நூல் ஒரு சிறந்த நண்பன், சிறந்த ஆசிரியர், சிறந்த அமைச்சரைப்போல் அறிவுரை கூறி வழிகாட்டும். நூல் என்பது சிறந்த இலக்கிய நூல்களை மட்டும் சுட்டவில்லை. இறைநெறி நூல்கள், வரலாற்று நூல்கள், உளவியல், தத்துவம், புதின நூல்கள்,…

க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 3/5 – ஆறு.செல்வனின் ஆய்வுரை

(க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 2/5 தொடர்ச்சி) 3 க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம்:    மற்றோர் இடத்தில், காவலர்களை நையாண்டி செய்கின்றார் பாவலர். நாட்டில் நடக்கும் பெரும்பெரும் கொள்ளைகளையும், கொலைகளையும் அரசியல்வாதிகளுக்கு அடிவருடிக்கொண்டு கண்டுங் காணாமல் போகும் காவல்துறை, இரவு நேரத்தில் வேலை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும்  ஏழைகளை ஐயப்பட்டு உசாவல் என்ற பெயரில் அழைத்துச் சென்று கடுமையாக அடித்துத் துன்புறுத்துவதையும் இரண்டு சக்கர வண்டிகளின் ஆய்வு என்ற பெயரால் தேவையற்ற கேள்விகள் கேட்டு வண்டி உரிமையாளர்களிடம் கையூட்டுபெற்றுக்கொண்டு அனுப்புவதையும் மனத்தில் கொண்டு…

மின்னூல் பதிவிறக்க : ‘(உ)ரூபி’ – பிரியா சுந்தரமூர்த்தி

  “எளிய இனிய கணினி மொழி” ‘(உ)ரூபி’ க்கு இதைவிடப் பொருத்தமான விளக்கத்தை அளித்திருக்க முடியாது. இன்று பெரும்பாலான இணையப் பயன்பாடுகள் ‘(உ)ரூபி’ ’யில் எழுதப்படுகின்றன. நிரலைச் சுருக்கமாக எழுதுவதே ‘(உ)ரூபி’ யின் ஆற்றல்வாய்ந்த இயல்புகளில் ஒன்றாகும். கணியன்(software)களை அதிவிரைவாகவும், எளிமையாகவும் ‘(உ)ரூபி’ யில் உருவாக்க முடியும். ‘(உ)ரூபி’ யின் அடிப்படையையும், பரவலாகப் பயன்படுத்தப்படும் சிறப்புகளையும் பிரியா இந்நூலில் விவரித்திருக்கிறார். ‘(உ)ரூபி’ யின் எளிமையும், இனிமையும் இந்நூலெங்கும் பரவியிருப்பது அவரது சிறப்பு. “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்; இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில்…