தென்மார்க்கில் “மெல்லத் தமிழ் இனி” : கலைவிழா
புரட்டாசி 26, 2046 / 10-10-2015 சனி மாலை 3 மணி
தென்மார்க்கில் புரட்டாசி 26, 2046 / 10-10-2015 சனி மாலை 3 மணிக்குத் தொடங்கும் “மெல்லத் தமிழ் இனி” என்பதனை மையமாகக் கொண்ட மாபெரும் கலைவிழாவில் ஞானசேகரன் இணையர் தலைமை விருந்தினர்கள் ஆகவும் பேராசிரியர் திரு. கோபன் மகாதேவா (4 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டு ஒருங்கிணைப்பாளர், தற்பொழுது வதியிடம் இலண்டன்) பாரதி இலக்கியச் செல்வர் திரு. கருணானந்தராசா (யுகபாரதி – இலண்டன்) கவிஞர். திரு. பொன் புத்திசிகாமணி (செருமனி) கவிஞர். திரு. அம்பலவாணன் புவனேந்திரன் ( செருமனி) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்கின்றார்கள்.
மேலாகப் பாரீசு, செருமனியில் இருந்து கலைஞர்கள் பலர் கலந்து கொள்கின்றார்கள்.
அவர்களுடன் தென்மார்க்கு கலைஞர்களும் கலந்து சிறப்பிக்கின்றார்கள்.
[ Holbæk Private Realskole : Absalonsvej 25, 4300 Holbæk
10-10-2015 3.00 – 10.30 pm ]
அடுத்தநாள் தென்மார்க்கின் மற்றைய பெரிய தீவில், ஞானசேகரன் இணையரும் பேராசிரியர் திரு. கோபன் மகாதேவா (இலண்டன்) அவர்களும் கலந்து கொள்ளும் இலக்கியச் சந்திப்பு ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
[ Skjoldskolen Skjoldhøjvej 9, 8381 Tilst, Denmark
11-10-2015 : 3.00 – 5.00 pm ]
அதன் பின்னரான திரு. திருமதி. ஞானசேகரனின் ஐரோப்பிய பயண விவரங்களை ஞானம் இதழின் 6 ஆம் பக்கத்தில் இணைத்துள்ளார்கள்.
நன்றி!
வி.சீவகுமாரன்
– நினைவு நல்லது வேண்டும் –
[ V. Jeevakuamaran
Havevang 28, 2 TV.
4300 Holbæk
Denmark
tlf.: 0045 – 59 46 45 47
0045 – 28 77 45 47 ]
இனிய செய்தி! விழா சிறப்பாக நடந்தேற நல்வாழ்த்துக்கள்!
இ.பு.ஞானப்பிரகாசன்