பிரபாகரன் பிறந்த நாள் பேச்சுப் போட்டி
விடுதலைப் பேரொளி பிரபாகரன் 68ஆவது பிறந்த நாளையொட்டிச்
சென்னை மாநகர அனைத்துக் கல்லூரிப் பேச்சுப் போட்டி!
முதல் பரிசு: உரூ.50,000/-
இரண்டாம் பரிசு: உரூ.25,000/-
மூன்றாம் பரிசு:உ ரூ.10,000/-
மேலும் 5 ஆறுதல் பரிசுகள்
நாள்: 26.11.2022
மாநகர் சென்னையில் மறத்தமிழ் வளர்க்கும்
மாணவர் – மாணாக்கியருக்கு அன்பு வணக்கம்!
பிரபாகரன் என்பது பெயர் மட்டுமில்லை.
அது விடுதலையின் முகவரி.
அச்சமின்மையின் அக வரி.
பிரபாகரன். ஆவேசம் பொங்க உரையாற்றுகிற பேச்சாளரில்லை. அரிதினும் அரிதான அவரது உரைகளில் சொல்மாயங்கள் இருந்ததில்லை. ஆனால், அவரது சொற்கள் ஒவ்வொன்றும் தமிழீழ மக்களின் உணர்வைப் எதிரொலித்தன. தூய்மையினும் தூய்மையான உண்மை ஒவ்வொரு சொல்லிலும் இருந்தது. அதனால்தான் தமிழினத்தின் அடையாளமாகவும் தமிழர் எழுச்சியின் வடிவமாகவும் திகழ்கிறது அந்த மாவீரனின் பெயர்.
ஆர்ப்பாட்டமாகப் பேசி ஆரவாரங்களை அறுவடை செய்து கொண்டிருக்காமல்
அமைதியாகவும் பொறுமையாகவும் ஒரு நதி போலவே நகர்ந்தது பிரபாகரனின் போராட்ட வாழ்க்கை.
பிரபாகரன் கடந்த பாதைகளில் மென்மையான மலர்கள் தூவப்பட்டிருக்கவில்லை…
கற்களும் முட்களுமே நிறைந்திருந்தன!
அந்த நிலையிலும் அறம் சார்ந்த மறம் என்கிற நிலையிலிருந்து அணுவளவு கூட
விலகிவிடவில்லை அந்த மாவீரன்.
பிரபாகரனின் 68ஆவது பிறந்தநாளையொட்டிப் பேச்சுப் போட்டியாக நடத்தப்படுகிற இந்த நிகழ்வு, பிரபாகரன் என்கிற விடுதலை விருட்சத்தை இளைய தலைமுறையினர் மூலம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துவதற்கான முயற்சி.
பேச்சுப் போட்டியில் பங்கேற்பதற்கான நடைமுறைகள்:
1. இது சென்னைக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் – மாணாக்கியர்களுக்கான போட்டி மட்டுமே!
2. பங்கேற்க விரும்பும் மாணவர் – மாணாக்கியர் தங்கள் பெயர்களைக் கீழ்க்காணும் எங்களது புலன (WhatsApp) எண் அல்லது மின்னஞ்சலில் பதிவு செய்ய வேண்டும்.
3. பெயர்களைப் பதிவு செய்யும்போது பயிலும் கல்லூரி – துறை போன்ற விவரங்கள்,
பெற்றோர் பெயர்களுடன் கூடிய முகவரி, தொடர்பு எண்கள், மின்னஞ்சல் முகவரி, கல்லூரி அடையாள அட்டையின் ஒளிப்படி – போன்றவை தேவை.
4. தகுதிச் சுற்று, இறுதிச் சுற்று என்று இரண்டு கட்டமாகப் போட்டி நடைபெறும். தகுதிச் சுற்றுப் போட்டி நடைபெறும் இடம், நேரம் ஆகிய விவரங்கள் மாணவர்களின் தொடர்பு எண் அல்லது மின்னஞ்சலுக்கு முறைப்படி தெரிவிக்கப்படும்.
5. தகுதிச் சுற்றில் தேர்ந்தெடுக்கப்படுவோர், கார்த்திகை 10 /நவம்பர் 26-ஆம் நாள் (26.11.2022, சனிக்கிழமை) சென்னையில் நடைபெறும் இறுதிச் சுற்றில் பங்கேற்பர்.
6. தகுதிச் சுற்று, இறுதிச் சுற்றுக்கான தலைப்பு போட்டி தொடங்குவதற்கு அரைமணி நேரம் முன்னதாக அறிவிக்கப்படும்.
7. கல்வியாளர்கள், தமிழறிஞர்கள் அடங்கிய தகுதி வாய்ந்த நடுவர் குழு ஒன்று மாணவ
மாணாக்கியரின் பேச்சுத் திறனை மதிப்பிடும். நடுவர்களின் தீர்ப்பு இறுதியானது.
கல்லூரி வளாகங்களைத் தமிழால் இழைப்போரே!
உணர்வால் தமிழரை இணைக்க வருக!
தமிழீழ ஆதரவுக் கலைஞர்கள் – இளைஞர்கள் – தொழிலாளர்கள்
புலன / அலைபேசி எண்: 9841 906290, மின்னஞ்சல் முகவரி: prabha68official@admin
Leave a Reply