ஐந்தாம் உலகத் திருக்குறள் மாநாடு : புதிய கால வரையறைகள்
ஐந்தாம் உலகத் திருக்குறள் மாநாடு :
புதிய கால வரையறைகள்
மதிப்பிற்குரிய தமிழறிஞருக்கு,
வணக்கம். சிகாகோவில் நடைபெறவுள்ள ஐந்தாம் உலகத் திருக்குறள் மாநாட்டில் பங்கேற்கத் தயாராகி வருகிறீர்கள் என்பதை அறிவோம். கடந்த சில நாட்களாக கட்டுரைச் சுருக்கம் அனுப்பவதற்கான கால வரையறையை நீடிக்கப் பலர் தொடர்பு கொண்டிருந்தனர். ஆய்வுக்குழுவும் அனைவரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டது. அதன்படி திருத்தி அமைக்கப்பட்ட புதிய கால வரையறைகள் பின்வருமாறு:
ஆய்வுச் சுருக்கம் வந்தடைய வேண்டிய நாள்:
15, திசம்பர்.2023 (சிகாகோ நேரம்)
முழு ஆய்வுக் கட்டுரை வந்தடைய வேண்டிய நாள்:
31, சனவரி, 2024.
மாநாட்டில் படைக்கப்படுகின்ற கட்டுரை முடிவுகள் அறிவிக்கப்படும் நாள்: 29.பிப்பிரவரி, 2024.
ஆய்வுக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய மின்வரி :
academic-committee@thirukkuralconference.org
இம்மாநாட்டில் பங்கேற்க ஆர்வத்துடன் ஆய்வுச் சுருக்கத்தை அனுப்பிய அறிஞர்களுக்கு நன்றி.
ஐந்தாம் உலகத் திருக்குறள் மாநாட்டினைப் பற்றிய செய்திகளை https://thirukkuralconference.org என்ற மாநாட்டின் இணையதளத்தில் காணவும். ஆய்வுக் கட்டுரைகள் தொடர்பான வினாக்கள் மற்றும் கருத்துகளை contact@thirukkuralconference.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
நன்றி.
ஆய்வுக்குழு,
ஐந்தாம் உலகத் திருக்குறள் மாநாடு,
சிகாகோ
பின் குறிப்பு : திருக்குறள் தொடர்பான புதிய நூல் வெளியீட்டிற்கும் பழைய நூல் அறிமுகத்திற்கும் பதிவு நாளைக் கார்த்திகை 29, 2054 / 15.12.2023 வரை நீட்டித்துள்ளோம். நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.
Leave a Reply