‘ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகள்’ தலைப்பிலான

கட்டுரைப் போட்டி

17.11.2022 அன்று வரும் உலகத்தமிழ் நாளையும் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் 123 ஆவது பிறந்த நாளையும் முன்னிட்டு, ‘ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகள், முற்றாக ஒழிப்பதற்கான தீர்வுகள்’ என்னும் தலைப்பிலான கட்டுரைப்போட்டியைத் தமிழ்க்காப்புக் கழகமும் இலக்குவனார் இலக்கிய இணையமும் இணைந்து நடத்துகின்றன.

ஏ4 அளவில் 4 பக்கம் குறையாமல் 6 பக்கம் மிகாமல் கட்டுரை இருத்தல் வேண்டும்.

இந்திய விடுதலை நாளில் இருந்து ஒன்றிய அரசு செய்துவரும் இந்தித்திணிப்புகளையும் அவற்றால் தேசிய மொழிகளுக்கு ஏற்பட்டு வரும் இடர்களையும் இழப்புகளையும் இந்தித்திணிப்புகளை முற்றாக ஒழிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய செயல்களையும் இவற்றில் மக்களின், அமைப்புகளின், கட்சிகளின் பங்களிப்பு குறித்தும் கட்டுரை அமைய வேண்டும். கட்டுரைப்போட்டியில் அகவை, கல்வி, பணி வேறுபாடின்றி அனைவரும் கலந்து கொள்ளலாம். பிறமொழிச்சொற்கள் அல்லது பிற மொழி எழுத்துகள் அல்லது கிரந்த எழுத்துகள் கலப்பின்றிக் கட்டுரை அமைய வேண்டும்.

கட்டுரை அனுப்புவதற்கான இறுதிநாள்:

ஐப்பசி 17, 2053 / 03.11.2022 ஆம் நாளுக்குள் அனுப்ப வேண்டும்.

கட்டுரையை  thamizh.kazhakam@gmail.com  என்னும் மின்வரிக்கு அனுப்ப வேண்டும். அவை சீருருவில் அமைய வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகளின் படைப்பாளர்களுக்கு வழங்கப்பெறும் பரிசு விவரம் வருமாறு:

இலக்குவனார் இலக்கிய இணையம் சார்பில் முனைவர் இ.மதியழகியும் இலக்குவனார் மனநல மருத்துவமனை சார்பில் மரு.இ.செல்வமணி தினகரனும் பரிசுகள் வழங்க உள்ளனர்.

முதல் பரிசு உரூ.5,000/- ; இரண்டாம் பரிசு உரூ.3,000/-

மூன்றாம் பரிசு உரூ.2000/-

அன்புடன்

தமிழ்க்காப்புக் கழகம்

இலக்குவனார் இலக்கிய இணையம்