கலைமாமணி விருதாளர்களுக்குப் பாராட்டுகள்!  அரசிற்கு நன்றி!

தமிழ்நாடு அரசு 201 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்குவதாக அறிவித்துள்ளது. விருது பெறும்  அனைவருக்கும் பாராட்டுகள்!  2010 ஆம் ஆண்டிற்குப் பின் கலமாமணி விருது வழங்காமை குறித்து கலைமாமணி விருதுகள் வழங்குவதைக் காலங்கடத்துவது ஏன்? என

 எழுதியிருந்தோம். தொடர் நடவடிக்கை எடுத்த பொழுது இயல் இசை நாடக மன்றித்திலிருந்தும் தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறையிலிருந்தும் நம் மடலை அரசிற்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டினர். அவ்வப்பொழுது நாமும் நினைவூட்டினோம். 23.02.2019 அன்று  தாய்மொழி நாளுக்கு வாழ்த்திய முதல்வருக்குப் பாராட்டுகள்! 

என எழுதிய கட்டுரையில் கலைமாமணி விருது வழங்காமை குறித்தும் குறிப்பிட்டிருந்தோம். எனவே, தமிழக அரசு மேலும் காலங்கடத்தாமல் விருதுகளை அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.  

விருதுகள் பெறும் பலரும் நம் நட்பு வட்டத்திலும் அறிமுக வட்டத்திலும் உள்ளவர்களாகவும் தக்கவர்களாகவும் உள்ளனர். விருது பெறும் கலைஞர்கள் அனைவருக்குமே நம் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க

தூங்காது செய்யும் வினை. (திருவள்ளுவர், திருக்குறள் 672)

என்னும் தமிழ் நெறியை இனியேனும் அரசு பின்பற்றுவதாக!

– இலக்குவனார் திருவள்ளுவன்

கலைமாமணி விருது பெறும் கலைஞர்கள்

[முன் குறிப்பு: அரசாணையில் உள்ளவாறே பிறமொழிச்சொற்களும் கிரந்த எழுத்துகளும் இடம்பெற்றுள்ளன. மாற்றித் திருத்த இயலவில்லை.}