கவிக்கோ நினைவுக்

குறும்பா(ஐக்கூ) விருது

2021

     சிறந்த குறும்பா(ஐக்கூ) நூல்களுக்கு உரூ.22 ஆயிரம் பரிசுத் தொகையுடன் விருது

   தமிழில் முதன்முதலாகக் குறும்பா(ஐக்கூ) கவிதை எழுதியதோடு, அதைப் பரவலாகவும் அறியச் செய்தவர் கவிக்கோ அபுதுல்ரகுமான். வரும் சூன் 2-ஆம் நாள் கவிக்கோவின் 4-ஆம் ஆண்டு நினைவு நாள். இதனையொட்டி, குறும்பா(ஐக்கூ) கவிஞரும் இளம் தொழில் முனைவருமான சேத்துப்பட்டைச் சேர்ந்த கவி.விசய், உலகு தழுவிய தமிழ்க் குறும்பா நூல்களுக்கான போட்டி ஒன்றினை அறிவித்துள்ளார்.

     2018, 2019, 2020 – ஆகிய மூன்று ஆண்டுகளில் வெளியான நூல்களின் 3 படிகளை வரும் மே-20-க்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.

    தேவைக்கேற்ப அச்சு(POD) எனப்படும் ஒளிப்படி நூல்களும், மொழிபெயர்ப்பு நூல்களும் போட்டியில் ஏற்கப்பட மாட்டா.

    ஒரு கவிஞரே எத்தனை நூல்களை வேண்டுமானாலும் அனுப்பலாம்.

     முதல் பரிசு உரூ. 10 ஆயிரம் – இரண்டாம் பரிசு உரூ. 5 ஆயிரம் – மூன்றாம் பரிசு உரூ. 3 ஆயிரம் – நான்கு    நூல்களுக்கு ஆறுதல் பரிசு உ ரூ.1000 வீதம்.

     ஆரணியில் வரும் சூன் மாதத்தில் நடைபெறவுள்ள கவி.விசய்-யின் குறும்பா நூல்கள் வெளியீட்டு விழாவில் விருதுகள் வழங்கப்படும்.

    நூல்களை அனுப்ப வேண்டிய முகவரி : அகநி வெளியீடு, எண்: 3, பாடசாலை வீதி,  அம்மையப்பட்டு, வந்தவாசி – 604 408, திருவண்ணாமலை மாவட்டம்.

    தமிழகத்தின் மூத்த குறும்பா கவிஞர்கள் நடுவர்களாக இருந்து, விருதுக்கான நூல்களைத்   தேர்வு செய்வர்.

    கூடுதல் விவரங்களைப் பெற அழையுங்கள் : 96004 56606