தலைப்பு-காவித்துணிவேண்டா,பாரதியார் ;thalaippu_kaaviveandaa_bharathiyaar

காவித் துணிவேண்டா, கற்றைச் சடைவேண்டா
பாவித்தல் போதும் பரமநிலை யெய்துதற்கே !

சாத்திரங்கள் வேண்டா சதுமறைக ளேதுமில்லை;
தோத்திரங்க ளில்லையுளந் தொட்டுநின்றாற் போதுமடா!

சி.சுப்பிரமணிய பாரதியார்