ஞாலம்

‘கவிதைக் குரல்கள்’

கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு

சென்னையில் செயல்பட்டு வரும் ஞாலம் இலக்கிய இயக்கம் ஆண்டுதோறும் பாவேந்தர் விழாவை முன்னிட்டு ஒரு கவிதைத் தொகுப்பினை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு மகுடை (கோரானோ) தாக்கத்தின் காரணமாகத் தாழ்ச்சியாக வெளிவர இருக்கிறது. கவிதைக் குரல்கள் என்னும் தலைப்பில் வெளிவர இருக்கும் இந்தக் கவிதைத் தொகுப்பிற்குக் கவிஞர்கள் தாங்கள் விரும்பும் தலைப்பில் தங்கள் கவிதைகளையும் ஒளிப்படத்தையும் தங்களைப் பற்றிய சிறு குறிப்பையும் muhilairaja@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி உதவுமாறு அன்புடன் வேண்டுகிறோம். கவிதைகள் நாற்பது அடிகளுக்கு மிகாமல் புதுக்கவிதையாகவோ மரபுக் கவிதையாகவோ அமையலாம். எந்தக் கட்டணமும் கிடையாது. நூலின்  ஒரு படி மட்டும் அன்பளிப்பாக வழங்கப்படும். எவ்வளவு விரைவில் அனுப்ப இயலுமோ அவ்வளவு விரைவில் அனுப்பி உதவுக.

தொடர்புக்கு: 9444365642

 

அன்புடன் முகிலை இராசபாண்டியன்