புதுச்சேரி மாநிலத்தில் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் மொத்தம் 8 பேர் போட்டி இடுகின்றனர்.

அவர்களுள் கால்பந்து சின்னத்தில் தனியராக முனைவர் க.தமிழமல்லன் போட்டியிடுகிறார்.

அவரது தேர்தல் அறிக்கை வருமாறு:

அனைவரும் வாழ்க! அனைவரும் உயர்க!   

   முனைவர் க.தமிழமல்லன் சிறந்த வேட்பாளர்!

முனைவர் க.தமிழமல்லன் தமிழ்ஆசிரியர் (ஓ) , பாவலர், இதழ்ஆசிரியர், தனித்தமிழ்இயக்கத் தலைவர். அவர் ஒழுக்கம் உடையவர். நேர்மையானவர். துாய்மையானவர்.

முனைவர் க.தமிழமல்லன்! சிறந்த அறிஞர், உயர்கல்வி கற்றவர், பல நுால்களை இயற்றியவர். வெல்லும் துாயதமிழ் என்னும் மாத இதழை 26 ஆண்டுகளாக நேர்மையாக வெளியிட்டு வருபவர்.      

 தட்டாஞ்சாவடித் தொகுதியை மேம்படுத்திப்  பொலிவுநகராக்கத் துடிப்பவர்.   முனைவர் க.தமிழமல்லன் தட்டாஞ்சாவடித் தொகுதியைச் சேர்ந்தவர்!

நிறைவேற்ற உள்ள பணிகள்

நமதுதொகுதியில் மக்களின் அடிப்படைத் தேவைகள் அரசின் உதவிகள் எளிதில் கிடைக்க ஆவன செய்யப்படும்.

குடும்ப அட்டைக்குரிய பொருள்கள் சரியான அளவில் கிடைக்கச் சட்டப்படி ஏற்பாடு செய்யப்படும்.

மின்சாரம், குடிநீர், சாலைச்சீரமைப்பு ஆகிய பணிகள் சரியாக நடக்க ஆவன செய்யப்படும்.

மக்களுக்கு விளையாட்டுத்திடல், சிறுவர்பூங்கா அமைக்க ஏற்பாடு செய்யப்படும்.    அனைத்து வட்டங்களிலும் அரசுமூலம் மருத்துவமனை, நுாலகம், அஞ்சலகம் அமைக்க முயற்சி எடுக்கப்படும். பாதாளச் சாக்கடைப்பணிகளை விரைவு படுத்திப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் இளையதலைமுறைக்குச் சொந்தத் தொழில் தொடங்க அரசுமூலம் ஏற்பாடு செய்யப்படும் .மகளிர்க்கும் இளைஞர்க்கும் தன்உதவிக்குழுக்களுக்கும் தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்படும்.    அரசு மூலம் மேனிலைப்பள்ளி, கல்லுாரி, உள்விளையாட்டு அரங்கம் அமைக்க ஆவன செய்யப்படும்.                                                           தொகுதிக்குட்பட்ட உட்புறஊர்களில் சிறுபேருந்துப் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்படும். தொகுதியில் உள்ள தொழிற்சாலைகள், மென்பொருள் நிறுவனங்களில் நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முயற்சிசெய்யப்படும்.      

நகராட்சியின் துப்புரவுப் பணிகள் மேம்படுத்தப்படும். அனைத்துப்பகுதிகளிலும் அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து நிழல்தரும் மரங்கள் நடப்படும். கொட்டுப்பாளையம் புதுமை மீன்அங்காடியை விரிவுபடுத்தி அங்கே காய்கறிகள், பழங்கள், மளிகைப்பொருள்கள் போன்றவை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.   அனைத்துப் பகுதிகளிலும் தூயகுடிநீர் நிலையங்கள் அமைக்க முயலப்படும்.    

புதுச்சேரிக்கு மாநிலத்தகுதி கிடைக்க முயற்சி செய்யப்படும்.

குற்றம் நிறைந்த அரசியலைத் துாய்மையாக்க முனைவர் க.தமிழமல்லனைத் தேர்ந்தெடுங்கள்!