காணாமல் போவர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

காணாமல் போவர்!     நேற்றுவரை வந்தவர்கள் நாளை காணாமல் போவர்   விரல் மை காயும் முன்னர் மாயமாய் மறைவர்   மறந்து போய் நன்றி சொல்ல வரலாம் சிலர்   தவறாமல் பலர் தொகுதிப் பக்கம் காணாமல் போவர்   நம் நாட்டுத் தேர்தலின் சிறப்பு இதுதான்   இருந்தாலும் நாம் தவறாமல் வாக்களிப்போம்!   இலக்குவனார் திருவள்ளுவன்

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் முனைவர் க.தமிழமல்லன்! வாகை மாலை அணிவிப்பீர்!

புதுச்சேரி மாநிலத்தில் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் மொத்தம் 8 பேர் போட்டி இடுகின்றனர். அவர்களுள் கால்பந்து சின்னத்தில் தனியராக முனைவர் க.தமிழமல்லன் போட்டியிடுகிறார். அவரது தேர்தல் அறிக்கை வருமாறு: அனைவரும் வாழ்க! அனைவரும் உயர்க!       முனைவர் க.தமிழமல்லன் சிறந்த வேட்பாளர்! முனைவர் க.தமிழமல்லன் தமிழ்ஆசிரியர் (ஓ) , பாவலர், இதழ்ஆசிரியர், தனித்தமிழ்இயக்கத் தலைவர். அவர் ஒழுக்கம் உடையவர். நேர்மையானவர். துாய்மையானவர். முனைவர் க.தமிழமல்லன்! சிறந்த அறிஞர், உயர்கல்வி கற்றவர், பல நுால்களை இயற்றியவர். வெல்லும் துாயதமிழ் என்னும் மாத இதழை 26 ஆண்டுகளாக…

ஏமாந்து போகாதே என்னன்புத் தமிழா! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

ஏமாந்து போகாதே என்னன்புத் தமிழா! மோதியுமிழ் என்றுரைத்த பாரதியின் பாட்டினையும், சாதியில்லை என்றுரைத்த பெரியாரின் கூற்றினையும், காதினிலே வாங்காமல் கண் மூடிக் கிடப்பதனால், நீதிநெறி தவறாத தலைவர்கள் இல்லாமல், நாதியற்று நெஞ்சுடைந்து நற்றமிழன் சாகின்றான்!   போதிமர நீழல்கள் பொய்யாகிக் கருகியதால், தீதிலுயர் ஊழல்கள் தொய்வின்றிப் பரவியதால், சாதனைகள் செய்வதாகச் சத்தியங்கள் செய்து, சூதாட்டக் களமாகத் தேர்தலினை மாற்றி, வேதனையில் தமிழர்களை வீழவைத்துத் தூகிலேற்றி, பாதியுயிர் பறித்தெடுத்துக் குற்றுயிராய் நிற்கவைத்தார்! மீதியுயிர் போகும்முன் மனந்தெளிந்து எழுந்து, நூதனமாய்ச் சிந்தித்து நல்லவரைத் தேர்ந்து, சோதிநிறை நன்னிலமாய்…

வேட்டியின்றி வருபவர்க்கே வாக்கென்று சொல்லிப்பார்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

வேட்டியின்றி வருபவர்க்கே வாக்கென்று சொல்லிப்பார்!     வாக்குவங்கி அரசியலில் தோற்குது தமிழ்நாடு, தூக்கிலிங்கு தமிழன் மானத்தை ஏற்றிய துயர்பாரு, வாட்டுமிந்த நரகத்திலே வாழ்வதும் பெரும்கேடு, காக்குமந்தக் கடவுளுக்கும் இலவசம் தரும் நாடு! வாக்களித்த பின்னர் பாவம் கடவளுக்கும்கூட, சீக்கிரத்தில் கிடைத்திடுமே சுடலையின் திருவோடு!   வேட்டியின்றி வருபவர்க்கே வாக்கென்று சொல்லிப்பார்! வெட்கமின்றி வெறுந்தொடையுடன், விரசமான இழிநடையுடன், வலம்வருவோர் எண்ணிக்கையோ தாண்டும் பலநூறு! வீட்டுக்குள்ளே சாக்கடையை ஓடவிட்டு அதிலே, வெற்றுடம்புடன் படுத்துறங்கி சுகங்கண்டதன் பலனாய், வான்புகழைக் கொண்டதமிழ் நாட்டுக்குள்ளே கடலாய், வக்கிரகுணச் சாக்கடைகள் வீதியெங்கும்…

தேர்தல் ஆணையம் மலிவான விளம்பரம் தேடாமல் கடமையாற்றட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தேர்தல் ஆணையம் மலிவான விளம்பரம்  தேடாமல் கடமையாற்றட்டும்!  தேர்தல் ஆணையம் எப்படிப் பணியாற்றினாலும் ஒவ்வொரு தரப்பாரும் அவரவர் கண்ணோட்டத்தில் குறை கூறத்தான் செய்வர். என்றாலும் தேர்தல் ஆணையத்தில் பணியாற்றுவோர் மனச்சான்றுடன் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையரின்  அறிவிப்புகளைப் பார்க்கும் பொழுது மலிவான விளம்பரத்தில் காட்டும் நாட்டத்தை உரிய கடமையாற்றுவதில் காட்டவில்லை என்றுதான் தெரிகின்றது.   எடுத்துக்காட்டிற்கு ஒன்று:-   தேர்தல் ஆணையம் அவ்வப்பொழுது ஊர்திகளை மடக்கிப் பணங்களைப் பறிமுதல் செய்வதாகச் செய்திகள் வருகின்றன. ஆனால், தேர்தல் ஆணையரின் அறிவிப்பின்படி, இவ்வாறு கைப்பற்றப்பட்ட பணத்தில்…

முதல்வர் நாற்காலிமீதுள்ள விருப்பம் தமிழ்மீது இல்லையே! – இலக்குவனார் திருவள்ளுவன்

  முதல்வர் நாற்காலிமீது விருப்பம் உள்ளவர்களுக்குத் தமிழ்மீது விருப்பம் இல்லையே!     நிலையான(நிரந்தர) முதல்வர் என்று ஒருவர்!  அடுத்தவாரம் முதல் முதல்வர் என்று சிலர் இருக்கின்றனர். தமிழ்நாட்டின் முதல்வராக விழைவோரின் தமிழ் உணர்வு எப்படி இருக்கிறது என்பதற்கு அடையாளமாக அவர்களின்  வேட்பு உறுதிப் பத்திரத்தைப் பார்த்தோம்.    இன்றைய முதல்வர் தன் வேட்புறுதியை ஆங்கிலத்தில் அளித்துள்ளார். ஆங்கிலத்தில்தான் கையொப்பம் இட்டுள்ளார். அரசின் பணியாளர்கள் தமிழில்  கையொப்படமிட வேண்டும் என்று ஓர்  ஆணை உள்ளது. இருப்பினும் ஏறத்தாழ 14 ஆண்டுகள் அரசை வழிநடத்தியும் கையொப்பம் …

தேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல! 1/2 – இலக்குவனார் திருவள்ளுவன்

1/2 தேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல!  1/2      உலக நாடுகளில் பெரிய மக்களாட்சி அமைப்பு கொண்ட நாடு இந்திய  ஒன்றியம். இங்குள்ள தேர்தல் முறைகளில் மாற்றம் வேண்டும் எனப் பலரும் கூறி வருகின்றனர். ஆனால், உண்மையில் இங்குள்ள தேர்தல் முறை சிறந்த ஒன்றேயாகும்.நாம் கையாளும் முறையால் சில தவறுகள்  நேர்கின்றன. இதற்கு நாம் சரியான முறையில் கையாள வேண்டுமே தவிர, இந்த முறையையே மாற்ற  வேண்டும் என்று எண்ணுவது தவறாகும்.     சீர்திருத்தம் என எண்ணிக் கொள்வோர்…

வேட்பாளர்களும் வாக்காளர்களும் பங்கேற்க வேட்பாளர் மேடை

  வேட்பாளர்களும்  வாக்காளர்களும் பங்கேற்க வேட்பாளர் மேடை     வரும் சட்டமன்றத்தேர்தலில்(2016) தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க ‘வேட்பாளர் மேடை’ என்னும் புதிய பகுதி (அகரமுதல மின்னிதழில்) தொடங்கப்படுகிறது.   வாக்காளர்களும் தங்கள் தொகுதிக்கு எத்தகைய வேட்பாளர் வரவேண்டும் என்று தங்கள் விருப்பத்தைத்தெரிவிக்கலாம்.   தத்தம் ஒளிப்படம், முகவரி, தொலை பேசி, அலைபேசி எண்கள் விவரங்கள், மின்னஞ்சல், சார்ந்துள்ள கட்சி அல்லது அமைப்பு அல்லது தற்சார்பு  (சுயேச்சை) விவரம், தொகுதி விவரம், தேர்தல் சின்னம் தெரிவிக்கப்படவேண்டும்.  …